பாடல் #32484
ஆனந்தமாய் வானவன் பாதம்
🔤 Aanandhamaay Vaanavan Paadham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமாய் வானவன் பாதம் பாடி மகிழ்வோம் அனைவரும் தானங்களை தந்த நல் இயேசு நாதனைப் புகழ்வோம் 1. அன்புடன் பணிவோம் - அன்பரை கன்மலையை கனிவுடன் நினைந்து பாடிடுவோம் நன்னயம் நவ வரங்கள் நமக்கருளிய தால் - துதித்து - ஆன 2. கரங்களை விரித்து - சுத்த நரரூபம் ஆனவனே நண்பருக்கிரங்கி தரவேணும் ஆசைகளை மைந்தர் மகிழவே - துதித்து - ஆன 3. நித்திய மகிமை - விண்ணிலே புத்திரர்க்குப் புதுமையாகப் புண்ணயனருளி நித்தமுமே முக்தியிலே பக்தரை அணைப்பார் - துதித்து - ஆன 4. என்ன மகிமையே - இன்பமே அன்னை தந்தை யாவரும் அரியவின்பமிதே உன்னதனே உமதடியை உணர்ந்து பாடிடுவோம் - துடித்து - ஆன 5. கர்த்தனைப் புகழ - கருணை சக்தியுள்ள நாவிருந்தால் எத்தனை மகிமை அத்தனுமை அனுதினமும் பாடுவதினிமை - துதித்து - ஆன் 6. உப்பரிகையில் - சாலேமின் தற்பரன் சாயலுடன் நின்றிலங்கிடுவோம் முத்துக்களின் வாசலில் சுற்றி ஏகிடுவேன் - துதித்து - ஆன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamaay Vaanavan Paadham Paati Makizhvom Anaivarum Thaananggalai Thandha Nal Yesu Naadhanaip Pugazhvom 1. Anpudan Panivom - Anbarai Kanmalaiyai Kanivudan Ninainthu Paatituvom Nannayam Nava Varanggal Namakkaruliya Thaal - Thuthitthu - Aana 2. Karanggalai Viritthu - Suttha Nararoobam Aanavanae Nanparukkirangki Tharavaenum Aasaigalai Maindhar Makizhavae - Thuthitthu - Aana 3. Nitthiya Makimai - Vinnilae Putthirarkkup Puthumaiyaagap Punnayanaruli Nitthamumae Mukthiyilae Paktharai Anaippaar - Thuthitthu - Aana 4. Enna Makimaiyae - Inbamae Annai Thanthai Yaavarum Ariyavinbamithae Unnathanae Umathatiyai Unarnthu Paatituvom - Thutitthu - Aana 5. Kartthanaip Pugazha - Karunai Sakthiyulla Naavirunthaal Etthanai Makimai Atthanumai Anuthinamum Paatuvathinimai - Thuthitthu - Aan 6. Upparikaiyil - Saalaemin Tharparan Saayaludan Ninrilangkituvom Mutthukkalin Vaasalil Surri Aekituvaen - Thuthitthu - Aana