பாடல் #32483
அன்பரின் நேசம்
🔤 Anbarin Naesam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரின் நேசம் அளவிடலாகுமோ அந்நிய ரெம்மை அணைத்த பேரன்பே - அன் அதிசயமாகவே ஆதியில் நினைந்து ஆதிபரனெமை அழைத்ததினாலே - அன் மண்ணில் மாயக் கண்ணில் மாளா தெண்ணியே என்னைக் கண்ணீர் சொரிந்தார் - அன் நித்திய மீட்பை நீ சருக்கீந்திட கெத்சமனேயில் கலங்கி வீழ்ந்திரோ - அன் பிலாத்துவின் முன் பேதையெனக்காய் விலங்குடனேகி இலங்கலானீரோ - அன் கள்வனென் நாமம் வள்ளலணிந்தீர் உள்ளம் உருகுதே உன்னத அன்பே - அன் மூவுலகிறைக்கு முள்முடி தானோ தூசியெனக்கினி பொன்முடி யானோ - அன் அன்பர் சேர்க்க வந்திடும் நேரம் இன்பமாய் என்னையும் ஏற்றுக்கொள்வாரா - அன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarin Naesam Alavidalaakumo Anniya Remmai Anaittha Paeranpae - An Athisayamaagavae Aathiyil Ninainthu Aathibaranemai Azhaitthathinaalae - An Mannil Maayak Kannil Maalaa Thenniyae Ennaik Kanneer Sorinthaar - An Nitthiya Meetpai Nee Sarukkeenthida Kethsamanaeyil Kalangki Veezhnthiro - An Pilaatthuvin Mun Paethaiyenakkaay Vilangkudanaeki Ilanggalaaneero - An Kalvanen Naamam Vallalanintheer Ullam Urukuthae Unnatha Anpae - An Moovulakiraikku Mulmuti Thaano Thoosiyenakkini Ponmuti Yaano - An Anbar Saerkka Vanthitum Naeram Inbamaay Ennaiyum Aerrukkolvaaraa - An