பாடல் #32480
ஆதிபரன் இயேசுவைப்
🔤 Aathibaran Yesuvaip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதிபரன் இயேசுவைப் பார் அதி ரூபமானவரின் திருமுகத்தை பார் 1. ஜோதியே வருணா துலங்கிய கருணா நீதி நெறி தவறாத நிர்மல நாதா - ஆதி 2. தினமுமன்றாடி துதிகளைப் பாடி இன்பமுற ஜீவியத்தை இகமதில் நாடி - ஆதி 3. காலையில் எழுந்து கர்த்தரை பணிந்து கருணையுள்ள காதலனை கனிவுடன் குனிந்து - ஆதி 4. பரகதி துறந்து பாரினில் பிறந்து நாரதர் வேடம் பூண்ட இயேசு நாதனை புகழ்ந்து - ஆதி 5. அமரர்கள் போற்றும் அழகுள்ள கோமான் அருள் பெற்றோர் அனுதினம் தரிசிக்கும் அதிரூபன் - ஆதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathibaran Yesuvaip Paar Athi Roobamaanavarin Thirumugatthai Paar 1. Jothiyae Varunaa Thulangkiya Karunaa Neethi Neri Thavaraadha Nirmala Naathaa - Aathi 2. Thinamumanraati Thuthigalaip Paati Inbamura Jeeviyatthai Igamathil Naati - Aathi 3. Kaalaiyil Ezhunthu Karttharai Paninthu Karunaiyulla Kaadhalanai Kanivudan Kuninthu - Aathi 4. Parakathi Thuranthu Paarinil Piranthu Naarathar Vaedam Poonda Yesu Naadhanai Pugazhnthu - Aathi 5. Amararkal Porrum Azhakulla Komaan Arul Perror Anuthinam Tharisikkum Athirooban - Aathi