பாடல் #32469
சத்துரு சேனைகள் மத்தியில்
🔤 Satthuru Saenaigal Matthiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்துரு சேனைகள் மத்தியில் ஜெய கீதம் பாடுவேன் 1. ஆழத்தில் என்னைத் தள்ளி விட்டாலும் அலைகள் என்னை மூடிக்கொண்டாலும் - சத் 2. வேதம் வாசித்து கீதம் பாடியும் வல்ல தேவனால் வல்லமை பாடுவேன் - சத் 3. வியாதிகள் வரும் துக்கம்மில்லை மரணம் வந்தாலும் பயமில்லை - சத் 4. சட்டெனக் கேட்டிடும் வானிலெக்காளம் பொட்டெனப் பிள்ளைகள் போய்விடும் பூமியின் பாரம் - சத் 5. சாத்தானும் சேனையும் ஓடி போகும் தேவனின் பிள்ளைகள் ஆனந்தித்திடுவார் - சத் 6. ஊண் உடை ஒன்றும் இல்லை யென்றாலும் உத்தம புத்திர ருள்ளம் மகிழ்வர் - சத் 7. மித்திர ரெல்லாம் சத்துரு வென்றாலும் மட்டற்ற மகிபன் மாறிடா ரென்றென்றும் - சத்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthuru Saenaigal Matthiyil Jeya Keedham Paatuvaen 1. Aazhatthil Ennaith Thalli Vittaalum Alaigal Ennai Mootikkontaalum - Sath 2. Vaedham Vaasitthu Keedham Paatiyum Valla Devanaal Vallamai Paatuvaen - Sath 3. Viyaathigal Varum Thukkammillai Maranam Vanthaalum Payamillai - Sath 4. Sattenak Kaettitum Vaanilekkaalam Pottenap Pillaigal Poyvitum Poomiyin Paaram - Sath 5. Saatthaanum Saenaiyum Oti Pokum Devanin Pillaigal Aananthitthituvaar - Sath 6. Oon Utai Onrum Illai Yenraalum Utthama Putthira Rullam Makizhvar - Sath 7. Mitthira Rellaam Satthuru Venraalum Mattartra Makiban Maaritaa Renrenrum - Sath