பாடல் #32444
எந்தன் இயேசு உன்னதத்தில்
🔤 Endhan Yesu Unnathatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எந்தன் இயேசு உன்னதத்தில் அன்புள்ளவன் வாழும் போது ஏழையேன் கலங்கிறேன் இப்பூமியில் - அதால் என்றும் அவர் கிருபை மட்டும் போதும் 2. இன்னல்களாம் குன்றுதனிற் பின்னிடாமல் ஏறுதற்கு இயேசு என் கால் தன்னை மான்கால் போலாக்கி - என்னை இன்பமாய் என் பாதையோடச் செய்குவார் 3. யாரும் துணையில்ல என்றோ ஏகனாய் நான் ஆனேன் என்றோ என் மனதில் எண்ணிடேன் ஓர் நாளும் - இயேசு என்னுடன் இல்லாமல் எங்கு போயினார் 4, என்னருமை தோழரன்றோ தெய்வ தூதர் சங்கமெல்லாம் இப்போதவர் என் பிதா முன் நிற்கிறார் - பின்னால் என்னையும் தன் ஊழியத்தின் தேற்றுவார் 5, வியாகுலம் என் வீட்டை விட்டுக் காட்டிலோடப் பண்ணிடனும் அங்கேயொரு துாதன் என்னை சந்தித்து - சூடாம் அப்பமும் ஜலமும் தந்து தேற்றுவேன் 6. வரும் நாளுக்காக வீணாய் என் மனம் நொந்தென்ன புண்யம் என்னை தினம் போஷிப்பவர் இல்லையோ - இன்னும் ஏழை யின் அவரை மட்டும் நம்புவேன் 7. கவனிப்பாய் காகத்தை நீ விதைப்புண்டோ அறுப்புண்டோ விலையின்றிப் போற்றவில்லையோ நாதன் - லீலிப் புஷ்பங்களில் வன்மையைத்தான் வைத்தார் 8. பத்மு தீவில் ஏகனாய் நான் தங்கிடும் பயப்படேன் வானந் திறந்தேசு நாதர் ஜோதியாய் - என்னைப் பரதீசில் ஆவிக்குள் எடுப்பாரே 9. ஹா மகேசா கருணேசா பொண்ணு நாதா நீரெனக்காய் வேண்டியதெல்லாம் தயவாய் தந்ததால் - நான் என் வாழ்நாளெல்லாம் உம்மைப் போற்றி பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Endhan Yesu Unnathatthil Anpullavan Vaazhum Pothu Aezhaiyaen Kalangkiraen Ippoomiyil - Athaal Enrum Avar Kirupai Mattum Pothum 2. Innalkalaam Kunrudhanir Pinnitaamal Aerudharku Yesu En Kaal Thannai Maankaal Polaakki - Ennai Inbamaay En Paathaiyodach Seykuvaar 3. Yaarum Thunaiyilla Enro Aeganaay Naan Aanaen Enro En Manathil Ennitaen Or Naalum - Yesu Ennudan Illaamal Engku Poyinaar 4, Ennarumai Thozharanro Theyva Thoodhar Sanggamellaam Ippodhavar En Pithaa Mun Nirkiraar - Pinnaal Ennaiyum Than Oozhiyatthin Thaerruvaar 5, Viyaakulam En Veettai Vittuk Kaattilodap Pannidanum Angkaeyoru Thuாdhan Ennai Santhitthu - Sootaam Appamum Jalamum Thanthu Thaerruvaen 6. Varum Naalukkaaga Veenaay En Manam Nonthenna Punyam Ennai Thinam Poshippavar Illaiyo - Innum Aezhai Yin Avarai Mattum Nampuvaen 7. Kavanippaay Kaagatthai Nee Vithaippunto Aruppunto Vilaiyinrip Portravillaiyo Naadhan - Leelip Pushpanggalil Vanmaiyaitthaan Vaitthaar 8. Pathmu Theevil Aeganaay Naan Thangkitum Payappataen Vaanan Thiranthaesu Naadhar Jothiyaay - Ennaip Paratheesil Aavikkul Etuppaarae 9. Haa Makaesaa Karunaesaa Ponnu Naathaa Neerenakkaay Vaentiyathellaam Thayavaay Thandhathaal - Naan En Vaazhnaalellaam Ummaip Porri Paatuvaen