பாடல் #32431
ஆனந்தக் கண்ணீர் பொழியும்
🔤 Aanandhak Kanneer Pozhiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தக் கண்ணீர் பொழியும் தேசமதில் என் அன்பர் இயேசுவின் பொன்முகம் காணுவேன் சந்தோஷமே அது சந்தோஷமே எனக்கானந்தமே பரமானந்தமே இயேசு 1. முன்னொரு நாளில் என் கண்ணீரைக் கண்டவர் என்னிலிருந்து துயரை எடுத்தவர் இந்நிலந்தன்னில் இவருக்கு நிகரெவர் என்னுள்ளில் தங்கும் இயேசு மகாராஜன் போல் 2. யுத்த களத்தில் என் சேனை தலைவரும் யுத்தத்தில் யாதும் தோல்வி வரவிடார் ஆதி இடை கடை தோல்வி போல் தோன்றுதல் ஆத்திரமாயன்பர் தங்கி நடத்துவார் 3. ஒவ்வொரு நாளிலும் இயேசு என்னுடன் ஒவ்வொரு சோதனை தன்னிலை மிருப்பார் சார்ந்து இளைப்பாற இயேசுவின் மார்பு போல் பாரில் நினைத்திடில் வேறொன் றெனக்கில்லை 4. தாயை மறந்து என் தந்தை இழந்து என் வேலை இனம் ஜனம் யாவும் மறந்தேன் நான் என்னுடன் தங்கிடும் இன்ப மகா ராஜன் தன் பாதம் சரணம் எல்லாம் எனக்கவர் 5. என்னை மறவாத காருண்ய பூமானே உன்னை மறந்து யான் என்ன செய்வேன் ஐயா என்றும் எனக்குள்ளதெல்லாம் மறந்து நான் இன்றும் என்றும் உமக்கூழியம் செய்குவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhak Kanneer Pozhiyum Thaesamathil En Anbar Yesuvin Ponmugam Kaanuvaen Santhoshamae Athu Santhoshamae Enakkaanandhamae Paramaanandhamae Yesu 1. Munnoru Naalil En Kanneeraik Kandavar Ennilirunthu Thuyarai Etutthavar Innilandhannil Ivarukku Nigarevar Ennullil Thangkum Yesu Makaaraajan Pol 2. Yuttha Kalatthil En Saenai Thalaivarum Yutthatthil Yaathum Tholvi Varavitaar Aathi Itai Katai Tholvi Pol Thonrudhal Aatthiramaayanbar Thangki Natatthuvaar 3. Ovvoru Naalilum Yesu Ennudan Ovvoru Sodhanai Thannilai Miruppaar Saarnthu Ilaippaara Yesuvin Maarpu Pol Paaril Ninaitthitil Vaeron Renakkillai 4. Thaayai Maranthu En Thanthai Izhanthu En Vaelai Inam Janam Yaavum Maranthaen Naan Ennudan Thangkitum Inba Makaa Raajan Than Paadham Saranam Ellaam Enakkavar 5. Ennai Maravaadha Kaarunya Poomaanae Unnai Maranthu Yaan Enna Seyvaen Aiyaa Enrum Enakkullathellaam Maranthu Naan Inrum Enrum Umakkoozhiyam Seykuvaen