பாடல் #3243
பரிசுத்தாவி நீர் வாரும்
🔤 Parisutthaavi Neer Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தாவி நீர் வாரும்! - திடப் படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்! - இன்று அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. - பரி 1.செயல்குண வசனத் தீதுகள் போக, திருச்சபை யதிலிவர் பூரணராக, ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக, ஜெபதப தியானஞ் செய்வதற்காக. - பரி 2.நற்கருணைதனை நலமுடன் வாங்க, நாளொரு மேனியாய் ஆவியி லோங்க, சற்குணராய் இவர் சபையைக்கை தாங்க, சகல தீதான பேதங்களும் நீங்க. - பரி 3.அஞ்ஞானங்க ளோடிவர் சமர் புரிய அருண்மறை யதினாழங் களையறிய, நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய, நின்னடியாரிவ ரென்பது தெரிய. - பரி 4.பத்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய, பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய, நித்தமுங் கிருபையின் கனி கொய்ய, நிலைவரமாய் இவராவியில் துய்ய. - பரி 5.தினமறை யோதி ஜெபித்து மன்றாட, திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட, உணர்வொடு தொழுது கீதங்கள் பாட, உள்ளத் திருந்து ஜீவாறுகளோட. - பரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthaavi Neer Vaarum! - Thidap Patutthal Peruvork Karul Thaarum! - Inru Arulinaip Perukkum Akkini Mayamae Aaviyin Narkani Nalkumaa Thooyamae. - Pari 1.seyalkuna Vasanath Theethugal Poga, Thirucchapai Yathilivar Pooranaraaga, Jeyamotu Paeyai Ethirtthuk Kontaega, Jebathapa Thiyaananj Seyvatharkaaga. - Pari 2.narkarunaidhanai Nalamudan Vaangga, Naaloru Maeniyaay Aaviyi Longga, Sarkunaraay Ivar Sapaiyaikkai Thaangga, Sakala Theethaana Paedhanggalum Neengga. - Pari 3.anjnjaanangga Lotivar Samar Puriya Arunmarai Yathinaazhang Kalaiyariya, Nenjsinil Anpu Kozhunthuvit Teriya, Ninnatiyaariva Renbathu Theriya. - Pari 4.patthiyun Thaazhmaiyumaa Yivar Uyya, Parisutthamaana Jeeviyanj Seyya, Nitthamung Kirupaiyin Kani Koyya, Nilaivaramaay Ivaraaviyil Thuyya. - Pari 5.thinamarai Yothi Jepitthu Manraada, Thirucchapai Yathinaik Kiyatthinir Kooda, Unarvotu Thozhuthu Keedhanggal Paada, Ullath Thirunthu Jeevaarugaloda. - Pari