பாடல் #32426
எந்நாளும் துதிக்க வேணும்
🔤 Ennaalum Thuthikka Vaenum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்நாளும் துதிக்க வேணும் - நாதனை எந்நாளும் துதிக்க வேணும் வந்தனம் பாடி மன்னன் முன் கூடி மயக்கமகற்றி திரு முன்னில் - நன்றியுடனே 1. ஆனந்தமாய் கூடுவோம் - பரனை வெகு சத்தமாய் பாடிடுவோம் கீத கணம் தேடி நாதனை நாம் பாடி நா தாமவரின் திரு நாமமே கதியாய் நாடி 2. சர்வ வல்ல நாயகன் - அவர் நமது நல்ல குண போதன் நிச்சயம் தாசர்க்குச் சித்தம் வெளியாக்கி கஷ்டத்தில் நின்றவரை முற்றும் விடுவிப்பவர் 3. தம்மை போற்றித் துதிக்கும் - ஜனங்கள் பாரம் தாமே சுமந்திடுவான் ராஜாதி ராஜாவாக என்றுமே வாழ்ந்திடுவேன் நன்றியோடு எல்லோருக்கும் இயேசுவை வணங்குவோம் 4. சிருஷ்டிகளின் நாதனே - ஜெயம் பெருகும் தூதர்கள் ராஜனே ஜீவனின் ஊற்றாமே ஜீவ லோக ஈசனே ஜீவனளிக்கச் சொந்த ஜீவனை கொடுத்தவர் 5. தேவ மகிமைக்காய் நாம் - தொடர்ந்து செய்தால் என்றும் திவ்யானந்தமாம் உன்ன தான் தன்னுடைய சன்னதியில் நின்று நாம் மன்னவனே புது பாட்டு வந்தனங்களோடே நிற்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalum Thuthikka Vaenum - Naadhanai Ennaalum Thuthikka Vaenum Vandhanam Paati Mannan Mun Kooti Mayakkamakarri Thiru Munnil - Nanriyudanae 1. Aanandhamaay Kootuvom - Paranai Veku Satthamaay Paatituvom Keedha Kanam Thaeti Naadhanai Naam Paati Naa Thaamavarin Thiru Naamamae Kathiyaay Naati 2. Sarva Valla Naayakan - Avar Namathu Nalla Kuna Podhan Nicchayam Thaasarkkuch Sittham Veliyaakki Kashtatthil Nindravarai Murrum Vituvippavar 3. Thammai Porrith Thuthikkum - Jananggal Paaram Thaamae Sumanthituvaan Raajaathi Raajaavaaga Enrumae Vaazhnthituvaen Nanriyotu Ellorukkum Yesuvai Vanangkuvom 4. Sirushtigalin Naadhanae - Jeyam Perukum Thoodharkal Raajanae Jeevanin Oorraamae Jeeva Loga Eesanae Jeevanalikkach Sondha Jeevanai Kotutthavar 5. Thaeva Makimaikkaay Naam - Thodarnthu Seythaal Enrum Thivyaanandhamaam Unna Thaan Thannutaiya Sannathiyil Ninru Naam Mannavanae Puthu Paattu Vandhananggalotae Nirpom