பாடல் #32243
ஒரு கண்ணுக்கும்
🔤 Oru Kannukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும் ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 1. பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2 இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும் வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2 நான் கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் அடைந்து கழுகை போல் சிறகடித்து உயர்ந்திடுவேன். -2 2. கானான் நாட்டிலே ஆசிர்வாதத்தால் என்னை ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார் என் தேவன் -2 தம் வாக்குதத்தம் நினைவு கூர்ந்திடும் தேவன் தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை -2 உயர வைத்திடுவார் என் பெயர் பெரிதாக்கிடுவார் என் கண்களினால் அவர் மகிமை கண்டிடுவேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Kannukkum Thayai Thonraamal Irunthaalum Oru Sevigalum En Pulambalai Kaetkaamal Irunthaalum – 2 En Azhukaiyin Sattham Kaetkum Devanae En Nilaimaigal Nanraaga Theriyum Yesuvae -2 Neer Ennai Kaivida Maatteer Purakkanikka Maatteer Kashta Naatkalil Ennotu Kooda Irunthituveer -2 1. Pelamillaathorkku Pelanai Kotukkum Devan Sornthu Ponorkku Pelanai Kotukkum Devan – 2 Ilainjarkal Ilaippatainthu Ponaalum Vaalibarkal Idari Vizhunthaalum -2 Naan Karttharukku Kaatthirunthu Puthupelan Atainthu Kazhukai Pol Sirakatitthu Uyarnthituvaen. -2 2. Kaanaan Naattilae Aasirvaadhatthaal Ennai Aasirvathippaarae Uyartthituvaar En Devan -2 Tham Vaakkudhattham Ninaivu Koornthitum Devan Thakuthiyillaa Idanggalilum Avar Ennai -2 Uyara Vaitthituvaar En Peyar Perithaakkituvaar En Kankalinaal Avar Makimai Kantituvaen – 2