பாடல் #32232
ஏனிந்த மௌனம் என்
🔤 Aenindha Maunam En
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏனிந்த மௌனம் என் செல்வமே உன்னை யன்றி எனை அண்டாவர - துணை யாருண்டு கண்ணே யாருண்டு கண்ணே ஆராரிராரோ ஆராரிரோ 1. பாலூட்டினேன் வன தேனுட்டினேன் - என் மடிமீது சாய்துனை சீராட்டினேன் - இன்று செந்நீரில் நீராட்டி சிதைந்த உன் மேனியை மடி மீது வைத்து கதறுகிறேன் - ஐயா 2. நோய் பிணி வந்து நீ மரித்திருந்தாலோ பாவி நான் மனம் ஆறி ஓய்ந்திருப்பேன் - இன்று பாதகன் போல தொங்க பாவம் என்ன செய்தேன் பதறுதையோ மனம் பொறுக்கலையே - ஐயா 3. சிறு பிள்ளையாய் எந்தன் கரம் பிடித்தான்று எருசலேம் வந்தது நினைவில்லையோ - இன்று நீயின்றி போனால் மகளெங்கே என்றால் பதிலென்ன சொல்வேன் புரியலையே - ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aenindha Maunam En Selvamae Unnai Yanri Enai Antaavara - Thunai Yaaruntu Kannae Yaaruntu Kannae Aaraariraaro Aaraariro 1. Paaloottinaen Vana Thaenuttinaen - En Matimeethu Saaythunai Seeraattinaen - Inru Senneeril Neeraatti Sithaindha Un Maeniyai Mati Meethu Vaitthu Katharukiraen - Aiyaa 2. Noy Pini Vanthu Nee Maritthirunthaalo Paavi Naan Manam Aari Oynthiruppaen - Inru Paadhakan Pola Thongga Paavam Enna Seythaen Patharuthaiyo Manam Porukkalaiyae - Aiyaa 3. Siru Pillaiyaay Endhan Karam Pititthaanru Erusalaem Vandhathu Ninaivillaiyo - Inru Neeyinri Ponaal Makalengkae Enraal Pathilenna Solvaen Puriyalaiyae - Aiyaa