பாடல் #32231
எந்தன் நேசர் அன்பை
🔤 Endhan Naesar Anpai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நேசர் அன்பை நாடும் செந்தமிழ் நாடு - தெள்ளு தமிழ் பண்பாடும் பைந்தமிழ் நாடு 1. திராவிட தந்தை எங்கள் ஆபிரகாம் அண்ணலுக்கு மேதினியில் நாகரீகம் சொல்லி தந்த திருநாடு நீதியுயர் நூல்களெல்லாம் ஓதி பலர் வாழ்ந்திருந்தும் சாதி பேதம் பேசு இன்று தாழ்ந்து போன தமிழ்நாடு பக்தியில் சிறந்த நாடு - இந்த பாருக்குள்ளே நல்ல நாடு - எந்தன் 2. ஈரடியில் இறையருளை எடுத்து வைத்த திருக்குறள் வள்ளுவனை உலகினுக்கே தந்த தெய்வ திருநாடு வீரமாமுனிவர் எங்கள் வேதநாயகம் இயேசுவையே பாடல் செய்த இணையில்லாத திருநாடு - பக்தி 3. பட்டினத்து அடிகள் கூறும் பரமகுரு இயேசு என்றும் பதினெட்டு சித்தர்கள் கண்ட ஜெயஜோதி இயேசு என்றும் இத்தரையின் இறைவன் எங்கள் இயேசு என்பதுரைத்திருந்தும் பக்தி நெறி பாதை மாறி வாழும் எங்கள் வளநாடு - பக்தி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Naesar Anpai Naatum Sendhamizh Naatu - Thellu Thamizh Panpaatum Paindhamizh Naatu 1. Thiraavida Thanthai Enggal Aapirakaam Annalukku Maethiniyil Naagareegam Solli Thandha Thirunaatu Neethiyuyar Noolkalellaam Othi Palar Vaazhnthirunthum Saathi Paedham Paesu Inru Thaazhnthu Pona Thamizhnaatu Pakthiyil Sirandha Naatu - Indha Paarukkullae Nalla Naatu - Endhan 2. Eeratiyil Iraiyarulai Etutthu Vaittha Thirukkural Valluvanai Ulakinukkae Thandha Theyva Thirunaatu Veeramaamunivar Enggal Vaedhanaayakam Yesuvaiyae Paadal Seytha Inaiyillaadha Thirunaatu - Pakthi 3. Pattinatthu Atigal Koorum Paramakuru Yesu Enrum Pathinettu Sittharkal Kanda Jeyajothi Yesu Enrum Ittharaiyin Iraivan Enggal Yesu Enbathuraitthirunthum Pakthi Neri Paathai Maari Vaazhum Enggal Valanaatu - Pakthi