பாடல் #32230
மேக வண்டியில் ஏறி
🔤 Maega Vantiyil Aeri
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேக வண்டியில் ஏறிச் சென்று என் மேசியாவை நான் கொண்டாடுவேன் பாவமில்லா பரலோக நாட்டிலென் இயேசுவோடு அரசாண்டிடுவேன் 1. காளையும் சிங்கமும் ஒருமித்து சேர்த்து கலந்து வாழும் நாடு காலையும் மாலையும் இரவும் பகல் என்ற பேதமில்லா நாடு சாபமில்லா நாடு அது ரொக்கமில்லா நாடு வறுமை வேதனை வலிய சோதனை வாட்டிடாத ஒரு நாட்டுக்கே - மேகம் 2. பாம்பின் தலையை நசுக்கி எங்கள் பரமன் ஆளும் நாடு பாம்பு புற்றினுள் கரங்களை வைத்து குழந்தை விளையாடும் நாடு தீட்டில்லாத நாடு அதை தீர்த்தவர் நாடு ஆட்டுக்குட்டியின் உதிர ஊற்றினால் ஆடை தோய்த்தவர் வாழும் நாட்டுக்கு - மேகம் 3. மீட்பரின் நாமம் அறிந்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழும் நாடு மாசில்லா தேவ மைந்தன் தினம் பேசி மகிழ்கின்ற நாடு இருள் நிறையா நாடு தேவ அருள் குறையுமா நாடு அன்பர் இயேசுவின் ஆறா காயங்கள் அருகில் கண்டு அநுராகம் படவே - மேகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maega Vantiyil Aerich Senru En Maesiyaavai Naan Kontaatuvaen Paavamillaa Paraloga Naattilen Yesuvotu Arasaantituvaen 1. Kaalaiyum Singgamum Orumitthu Saertthu Kalanthu Vaazhum Naatu Kaalaiyum Maalaiyum Iravum Pakal Endra Paedhamillaa Naatu Saabamillaa Naatu Athu Rokkamillaa Naatu Varumai Vaedhanai Valiya Sodhanai Vaattitaadha Oru Naattukkae - Maegam 2. Paampin Thalaiyai Nasukki Enggal Paraman Aalum Naatu Paampu Purrinul Karanggalai Vaitthu Kuzhanthai Vilaiyaatum Naatu Theettillaadha Naatu Athai Theertthavar Naatu Aattukkuttiyin Uthira Oorrinaal Aatai Thoytthavar Vaazhum Naattukku - Maegam 3. Meetparin Naamam Arindhavarkal Onru Saernthu Vaazhum Naatu Maasillaa Thaeva Maindhan Thinam Paesi Makizhkindra Naatu Irul Niraiyaa Naatu Thaeva Arul Kuraiyumaa Naatu Anbar Yesuvin Aaraa Kaayanggal Arukil Kantu Anuraagam Patavae - Maegam