பாடல் #32223
அல்லேலூயா ஓசன்னா
🔤 Allaelooyaa Osannaa
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா ஓசன்னா - உன் வாழ்க்கை ரொம்ப மாசந்தான் - நான் உள்ளதை சொன்னா கோபம் எது கண்ணா - இந்த உலக வேஷம் போடும் நீயும் உண்மை சீஷன் - இயேசுவுக்கு 1. உத்தமன் போல நிமிர்ந்து மற்றவரை குற்றங்குறைகள் கூறி தப்பிவிட நினைச்சுடாத பரிசேயன் சென்ற வழியில் சுத்த மனம் இல்லையென்றால் தெய்வ லோகம் சொந்தமில்லை சுத்தமான கொண்டு சுத்தரிடம் சொல்லு நித்திய நரகம் உனக்கில்ல - அல்லேலூயா 2. பாடுபட்டு பணத்தை சேர்த்து குவித்திடு பல வழிகள் தேடி பொய்யும் புரட்டும் பேசி அழியும் பொருளை சேர்கிறான் பணத்துக்கு பல்லிளிச்சா பரலோகம் சொந்தமில்லை பதறி கதறி அழுதாலும் வருகையிலுனக்கிடமில்லை - அல்லேலூயா 3. தூஷணங்கள் பேசும் உதட்டில் துதியின் கீதம் தொனிக்குதடா சச்சரவு சண்டைகளிட்டு சமாதானம் கூறுதடா சுயநல பேய் பிடிச்சா சொர்க்கலோகம் சொந்தமில்லை சுற்றி சுற்றி வந்து கதறினாலும் சித்தர்கள் கூட்டத்திலிடமில்லை - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Osannaa - Un Vaazhkkai Romba Maasanthaan - Naan Ullathai Sonnaa Kobam Ethu Kannaa - Indha Ulaka Vaesham Potum Neeyum Unmai Seeshan - Yesuvukku 1. Utthaman Pola Nimirnthu Martravarai Kurtrangkuraigal Koori Thappivida Ninaichsutaadha Parisaeyan Sendra Vazhiyil Suttha Manam Illaiyenraal Theyva Logam Sondhamillai Sutthamaana Kontu Suttharidam Sollu Nitthiya Narakam Unakkilla - Allaelooyaa 2. Paatubattu Panatthai Saertthu Kuvitthitu Pala Vazhigal Thaeti Poyyum Purattum Paesi Azhiyum Porulai Saerkiraan Panatthukku Pallilichsaa Paralogam Sondhamillai Pathari Kathari Azhuthaalum Varukaiyilunakkidamillai - Allaelooyaa 3. Thooshananggal Paesum Udhattil Thuthiyin Keedham Thonikkudhataa Saccharavu Santaigalittu Samaathaanam Koorudhataa Suyanala Paey Pitichsaa Sorkkalogam Sondhamillai Surri Surri Vanthu Katharinaalum Sittharkal Koottatthilidamillai - Allaelooyaa