பாடல் #32219
என்னை ஆண்டு நடத்திடும்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
என்னை ஆண்டு நடத்திடும் தேவாவியே முற்றும் வழிநடத்தும் குற்றமில்லாமையிலே - அன்பில் பரிசுத்தம் காத்திடவே - என்னை 1. சீர்குலைந்து முற்றும் சீரழிந்தேன் சித்தங் கொண்டு என்னை தெரிந்தெடுத்தீர் நிந்தனைகள் நீங்கிடவே - என் நிபந்தனை ஏதும் சொல்லாத வரை - என்னை 2. எல்லை இல்லை அன்பிற்க்கெல்லையில்லை கல்வாரி நேசர் காயங்களே சுமந்தவரே ஏந்திடும் - எனை சுமந்திட சிலுவைகள் ஏற்றிடுவேன் - என்ன 3. கிருபையிலே தேவ கிருபையிலே பெலப்பட தடைகளை நீக்கி நீரே அடைக்கலமே அளிதவரே - உயிர் கறைபடா வாழ்வெனக்களித்திடுமே - என்னை 4. ஜீவ நதி பொங்கிப் எனில் பெருக உமது வசனங்கள் ஊற்றிடுமே ஜீவன் எனில் இருக்கும் வரை - என் உமக்கென வாழ்வினை ஈந்திடுவேன் - என்னை