பாடல் #32214
உம்மை அன்றி உலகில்
🔤 Ummai Anri Ulakil
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அன்றி உலகில் யார் துணை தேவா திரு அவதார தெய்வ குமாரா தேனிலும் இனியது மலரடி தா..தா.. யார் துணை தேவா... நீர் துணை தேவா .... 3 1. பரிசுத்தம் வேண்டும் இதயத்திலே பரிசுத்த தேவனை தரிசிக்கவே திரு சித்தம் கொண்டமை பரிசுத்த ராக்கிட மாசிலா உதிரம் சிந்திய தேவா - உம்மை 2. பாடுகள் வழியே பரமனை நாடு பாடுபட்டோர்க்குப் பலனளிப்பீரே அநுதினம் சிலுவைகள் சுமந்திட அருளும் நலிந்திடும் எமக்கினி நலந்தரும் தேவா - உம்மை 3. வருத்திடும் பாரம் சுமந்தலைவோரே வாருங்கள் என்றார் பாதம் வந்தோம் நுகந்தனை ஏற்றிட மனதை மாற்றும் சாந்தமும் தாழ்மையும் உள்ள என் தேவா - உம்மை 4. கேட்டதையெல்லாம் ஈந்தவர் சாற்றிடும் துதிகள் ஏற்றிடுவீர் துணையின்றி வாடினேன் துயர்மிகு முலகில் வலக்கரம் பிடித்து எம்மை நடத்திடும் தேவா - உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Anri Ulakil Yaar Thunai Thaevaa Thiru Avathaara Theyva Kumaaraa Thaenilum Iniyathu Malarati Thaa..thaa.. Yaar Thunai Thaevaa... Neer Thunai Thaevaa .... 3 1. Parisuttham Vaentum Idhayatthilae Parisuttha Devanai Tharisikkavae Thiru Sittham Kondamai Parisuttha Raakkida Maasilaa Uthiram Sinthiya Thaevaa - Ummai 2. Paatugal Vazhiyae Paramanai Naatu Paatubattorkkup Palanalippeerae Anuthinam Siluvaigal Sumanthida Arulum Nalinthitum Emakkini Nalandharum Thaevaa - Ummai 3. Varutthitum Paaram Sumandhalaivorae Vaarunggal Enraar Paadham Vanthom Nugandhanai Aerrida Manathai Maarrum Saandhamum Thaazhmaiyum Ulla En Thaevaa - Ummai 4. Kaettathaiyellaam Eendhavar Saarritum Thuthigal Aerrituveer Thunaiyinri Vaatinaen Thuyarmiku Mulakil Valakkaram Pititthu Emmai Natatthitum Thaevaa - Ummai