பாடல் #32213
நீதியுள்ள நியாயாதிபதியாக
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
நீதியுள்ள நியாயாதிபதி யாக நீதிபரர் இயேசு வருகிறார் நீதியாய் நியாயந்தீர்த்து நித்தியத்திலே இடங்கொடுப்பார் 1. வானில் தோன்றும் மின்னல் போல இயேசு வருகிறார் வான தூதர் சூழ அண்ணல் இயேசு வருகிறார் பரமன் இயேசு மேகம் மீது பறந்து வருகிறார் பெரும் காகள தொனி முழங்க இயேசு வருகிறார் வருகிறார் வருகிறார் - இயேசு வருகிறார் 2. முதிர்ந்த மணிகளில் அறுக்க தேவன் வேகம் வருகிறார் தம் களஞ்சியத்தில் சேர்த்திடவே இறங்கி வருகிறார் அறுப்புக் காலம் முடித்திட வே இறைவன் வருகிறார் களை பதரைப் பறித்து நெருப்பில் போட விரைந்து வருகிறார் 3. நினைத்திடாத நாழிகையில் இயேசு வருகிறார் - எதிர் நோக்கும் நம்மை ஏற்கும் தேவன் இறங்கி வருகிறார் உதிரம் சிந்தி நம்மை மீட்ட வேந்தன் வருகிறார் . நமக்களிக்கும் பலனை ஏக தெய்வம் எடுத்து வருகிறார் 4. பாடு மரணம் சுமந்த தேவன் பறந்து வருகிறார் - புது எருசலேமில் சேர்க்க நம்மைத் தேடி வருகிறார் குணப்படாத பாவிகளைத் தீர்க்க வருகிறார் - புது வானம் பூமி ஆட்சி நமக்கு அளிக்க வருகிறார்