பாடல் #32207
சிந்தையை அடக்கியே
🔤 Sinthaiyai Adakkiyae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது சத்தாகி யென் சித்த மிசை குடிகொண்ட விரிவான தெய்வமே தேஜோமயானந்தமே தேசோ மயனாந்தமே நெஞ்சமெல்லாம் நீ தானையா - எந்தன் நினைவெல்லாம் நீ தானையா பஞ்சமா பாவி யெந்தன் கெஞ்சுமனம் பதறுதையா தஞ்சமுனையடைந்தேன் சரணம் சரணம் ஐயா 1. குந்தி குந்தி நடந்து குற்றமெலாம் புரிந்தேன் சிந்தையடக்கியுந்தன் சுத்தம் செய்ய மறந்தேன் தந்திர பேய் சகவாசம் சதமென துலைந்தேன் சுந்தர மைந்தனே மீண்டும் சிலுவையில் தானறைந்தேன் - நெஞ்சமெல்லாம் 2. விட்டு விட்டேன் உமையே துட்டனெனக்கார் துணையே கெட்ட மகன் போலலைந்தேன் கட்டுக்கடங்காத திருந்தேன் புகலிட மெனக்காரோ பிளவுண்ட மழைதானோ அடியவர்க் கருள் சேரும் அமலனே யுமை நாடும் - நெஞ்சமெல்லாம் 3. தத்தளித்தேன் பரனே சத்தியத்தை மறந்தே சித்தமிலா தெவர்க்கும் நித்தியத்திலே திடமே கத்தி கத்தியழுதாலும் கர்த்த னழைத்தாலன்றி சுத்தர்களுறை பரமே இத்தரணியோர்க் கிலையே - நெஞ்சமெல்லாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinthaiyai Adakkiyae Summaa Irukkindra Thiramarithu Satthaaki Yen Sittha Misai Kutikonda Virivaana Theyvamae Thaejomayaanandhamae Thaeso Mayanaandhamae Nenjjamellaam Nee Thaanaiyaa - Endhan Ninaivellaam Nee Thaanaiyaa Panjjamaa Paavi Yendhan Kenjsumanam Patharuthaiyaa Thanjjamunaiyatainthaen Saranam Saranam Aiyaa 1. Kunthi Kunthi Natanthu Kurtramelaam Purinthaen Sinthaiyatakkiyundhan Suttham Seyya Maranthaen Thanthira Paey Sakavaasam Sathamena Thulainthaen Sundhara Maindhanae Meentum Siluvaiyil Thaanarainthaen - Nenjjamellaam 2. Vittu Vittaen Umaiyae Thuttanenakkaar Thunaiyae Ketta Makan Polalainthaen Kattukkatangkaadha Thirunthaen Pugalida Menakkaaro Pilavunda Mazhaithaano Atiyavark Karul Saerum Amalanae Yumai Naatum - Nenjjamellaam 3. Thatthalitthaen Paranae Satthiyatthai Maranthae Sitthamilaa Thevarkkum Nitthiyatthilae Thidamae Katthi Katthiyazhuthaalum Karttha Nazhaitthaalanri Suttharkalurai Paramae Ittharaniyork Kilaiyae - Nenjjamellaam