பாடல் #32205
வேஷம் போடுறான்
🔤 Vaesham Poturaan
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேஷம் போடுறான் - மனுஷன் வேஷம் போடுறான் சஞ்சலப்படுகிறது - வீணா சஞ்சலப்படுகிறது 1. ஆஸ்தி பூஸ்தி சேர்த்து வச்சு ஆட்டம் போடுறான் அதை வாரிக்கொள்வார் யாரோ என்பதை மறந்து போகிறான் பண ஆசைக்கு பேரு எல்லா தீமைக்கும் வேர் என எடுத்துரைக்கும் வேதம் சொல்லும் வழி துறந்து தன்னை மறந்து வேஷம் போடுறான் சஞ்சலப்படுகிறது அழிஞ்சில் போகிறான் - மனுஷன் 2. உண்டு பெருத்து தின்னு கொழுத்த வாழ நினைக்கிறேன் - தினம் கண்டு களித்து திரைப்படங்களை நா அலையிறேன் உண்டு தூங்கும் உடலிது சாவுக்கேதுவான து ஒரு பாடையேறி மண்ணுக்குள் இறங்கி மறைஞ்சி போகும் இதை மறந்து - வேஷம் 3. மூடநம்பிக்கை கூடாதுன்னு பாடம் படிக்கிறேன் ஆனா விளக்கு வைக்கிற நேரத்தில் கன்னத்தில் புதிய போட்டுக்கிறான் ஆடி மாசம் கல்யாணம் முடிக்க தயங்குறான் பல சடங்கு நடத்துறான் ராகு காலம் பாக்குறான் வீண் பாரம்பரிய பழக்க வழக்கம் மாத்த மறந்து மூடி மறைச்சி - வேஷம் 4. பரிசுத்தமான ஜாதியென்று பாட்டு பாடுறான் பையன் கல்யாணத்துக்கு சொந்த ஜாதி பொண்ணு தேடுறான் பொண்ணு கல்யாணத்துக்கு சொந்த சாதி பையன் தேடுறான் பரலோக நாட்டில் பல சாதி ஏதுங்க பூலோக ஜாதி பேதமெல்லாம் அங்கே இல்லை இதை மறந்து - வேஷம் 5. வேஷம் கலைஞ்சிபோகும் நாளும் விரைவில் வருகுது - நாடு வானில் இயேசுவோடு தூதர் சேனை இறங்குது பதர் பறந்து போக மணி களத்தில் குவியுது - வேத வசனம் கேட்டு நடக்கும் போது வாழ்வில் இன்பம் இதை மறந்து - வேஷம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaesham Poturaan - Manushan Vaesham Poturaan Sanjjalappatukirathu - Veenaa Sanjjalappatukirathu 1. Aasthi Poosthi Saertthu Vachsu Aattam Poturaan Athai Vaarikkolvaar Yaaro Enbathai Maranthu Pokiraan Pana Aasaikku Paeru Ellaa Theemaikkum Vaer Ena Etutthuraikkum Vaedham Sollum Vazhi Thuranthu Thannai Maranthu Vaesham Poturaan Sanjjalappatukirathu Azhinjsil Pokiraan - Manushan 2. Untu Perutthu Thinnu Kozhuttha Vaazha Ninaikkiraen - Thinam Kantu Kalitthu Thiraippatanggalai Naa Alaiyiraen Untu Thoongkum Udalithu Saavukkaethuvaana Thu Oru Paataiyaeri Mannukkul Irangki Marainjsi Pokum Ithai Maranthu - Vaesham 3. Moodanampikkai Kootaathunnu Paadam Patikkiraen Aanaa Vilakku Vaikkira Naeratthil Kannatthil Puthiya Pottukkiraan Aati Maasam Kalyaanam Mutikka Thayangkuraan Pala Satangku Natatthuraan Raaku Kaalam Paakkuraan Veen Paarambariya Pazhakka Vazhakkam Maattha Maranthu Mooti Maraichsi - Vaesham 4. Parisutthamaana Jaathiyenru Paattu Paaturaan Paiyan Kalyaanatthukku Sondha Jaathi Ponnu Thaeturaan Ponnu Kalyaanatthukku Sondha Saathi Paiyan Thaeturaan Paraloga Naattil Pala Saathi Aethungga Poologa Jaathi Paedhamellaam Angkae Illai Ithai Maranthu - Vaesham 5. Vaesham Kalainjsipokum Naalum Viraivil Varukuthu - Naatu Vaanil Yesuvotu Thoodhar Saenai Irangkuthu Pathar Paranthu Poga Mani Kalatthil Kuviyuthu - Vaedha Vasanam Kaettu Natakkum Pothu Vaazhvil Inbam Ithai Maranthu - Vaesham