பாடல் #32204
பாடுபட்டு பணத்தை
🔤 Paatubattu Panatthai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுபட்டு பணத்தை சேர்த்து வைக்கின்ற கேடுகெட்ட மானிடனே கேளாய் கூடு விட்டு ஆவி போன பின்னே கூட ஒன்றும் வருவதில்லை மனிதா மனிதா கூட ஒன்றும் வருவதில்லை மனிதா மனிதா மானிட வாழ்வில் நிலைப்பதில்லை நிஜமே நிஜமே பாவத்தின் சம்பளம் மரணம் உணர்ந்தால் உன்னையே அழித்திடுவான் நித்திய ஜீவன் - எங்கள் இயேசுவே தாலாட்டி பாலூட்டும் அன்னை அழுதாலும் தோள் மீது சுமந்து வளர்த்த தந்தை தடுத்தாலும் தாரமாக வந்தவள் மார்பில் சாய்ந்த அழுதாலும் பெற்றெடுத்த பெண்ணும் பிள்ளையும் புரண்டு புரண்டு அழுதாலும் - மனிதா 2. பொன்னாலும் பூவாலும் அலங்கரித்தாலும் வண்ண வண்ண ஆடைகளை நீயணிந்தாலும் பூவாலே மேடையிட்டு புத்தாடை போர்த்தி புழுக்களுக்கிரையாக புழுதியிலே விதைத்திடுவார்- மனிதா 3. அப்பாவி போல நீ விழித்து நின்றாலும் ஆளுகை அதிகாரம் படைச்சிருந்தாலும் ஆள் அம்பு சேனை வச்சு ஆட்சி செய்தால் ஆறடி ஆழத்தில் ஆடு அடங்கிடுவாய் - மனிதா 4. மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை யாலே உன்னாசை உலக வாழ்வு முடியும் தன்னாலே உன் பாவம் உன்னை தொடர்ந்து பிடிக்கும் பின்னாலே எந்நாளும் இயேசுவல்லால் நித்தியத்திலிடமில்லையே -மனிதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatubattu Panatthai Saertthu Vaikkindra Kaetuketta Maanidanae Kaelaay Kootu Vittu Aavi Pona Pinnae Kooda Onrum Varuvathillai Manithaa Manithaa Kooda Onrum Varuvathillai Manithaa Manithaa Maanida Vaazhvil Nilaippathillai Nijamae Nijamae Paavatthin Sambalam Maranam Unarnthaal Unnaiyae Azhitthituvaan Nitthiya Jeevan - Enggal Yesuvae Thaalaatti Paaloottum Annai Azhuthaalum Thol Meethu Sumanthu Valarttha Thanthai Thatutthaalum Thaaramaaga Vandhaval Maarpil Saayndha Azhuthaalum Perretuttha Pennum Pillaiyum Purantu Purantu Azhuthaalum - Manithaa 2. Ponnaalum Poovaalum Alanggaritthaalum Vanna Vanna Aataigalai Neeyaninthaalum Poovaalae Maetaiyittu Putthaatai Portthi Puzhukkalukkiraiyaaga Puzhuthiyilae Vithaitthituvaar- Manithaa 3. Appaavi Pola Nee Vizhitthu Ninraalum Aalukai Athikaaram Pataichsirunthaalum Aal Ampu Saenai Vachsu Aatsi Seythaal Aarati Aazhatthil Aatu Adangkituvaay - Manithaa 4. Mannaasai Ponnaasai Pennaasai Yaalae Unnaasai Ulaka Vaazhvu Mutiyum Thannaalae Un Paavam Unnai Thodarnthu Pitikkum Pinnaalae Ennaalum Yesuvallaal Nitthiyatthilidamillaiyae -manithaa