பாடல் #32202
கரங்கள் தட்டி கர்த்தரைப்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
கரங்கள் தட்டி கர்த்தரைப் பாடுங்கள் - அல்லேலூயா ஆண்டவரை பாடுங்கள் ஆனந்தமாய் பாடுங்கள் 1. வானம் பூமி உண்டாக்கின அவரை பாடுங்கள் - நம்மை வான லோகம் சேர்ப்பவர் வாழ்த்தி பாடுங்கள் - ஆண்டவரை 2. செங்கடலை பிரித்தவர் சேர்ந்து பாடுங்கள் - தினம் செம்மையான இதயத்தோடு அவரை பாடுங்கள் - ஆண்டவரை 3. எரிகோ மதில் உடைத்தவரை எழுந்து பாடுங்கள் என்னில்லாத நன்மை செய்த அவரை பாடுங்கள் - ஆண்டவரை 4. நல்லவர் அவர் என்பதையே ருசித்து பாடுங்கள் வல்லவர் எங்கள் இயேசு என்று வணங்கி பாடுங்கள் - ஆண்டவரை 5. மரித்தெழுந்த மகிபனையே மகிழ்ந்து பாடுங்கள் நமக்காக பரிந்து பேசும் பரனை புகழ்ந்து பாடுங்கள் - ஆண்டவரை 6. தாயைப் போல காப்பவரே துதித்துப் பாடுங்கள் - நம் தாழ்வில் நம்மை நினைத்தவரை தினமும் பாடுங்கள் - ஆண்டவரை 7. காலை மதியம் மாலையிலும் அவரைப் பாடுங்கள் - நடு இரவினிலே விழித்து எழுந்து ஜெபித்த பாடங்கள் - ஆண்டவரை