பாடல் #32189
உம்மைப் போல் யாரும்
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
உம்மைப் போல் யாரும் இல்லை... யாருமில்லையே இயேசு நீ இல்லை என்றால் வாழ்க்கையில்லை நீர் ஒருவரே பரிசுத்த தெய்வம் நீர் ஒருவரே பரலோக தெய்வம் நீர் ஒருவரே மாறாத தெய்வம் நீர் ஒருவரே மகிமையின் தெய்வம் 1. அளவில்லா கிருபை என் மேல் வைத்ததால் தானே அழியாமல் உம்முன்(உந்தன்) முன்னே நிற்கிறேன் நான் -உம்மைப் போல் 2. அப்பா உன் சமூகம் என் ஆனந்தம் தான் உம் செயலாக மாற ஏங்குகிறேன் நான் -உம்மைப் போல் 3. நீர் இல்லாத ஒரு வாழ்க்கை பூமியில் வீணே உயிருள்ள நாளெல்லாம் உன் புகழ் பாடுவேன் - உம்மைப் போல்