பாடல் #32187
நீர் மாத்ரம் போதும்
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் இயேசுவே இந்த உலகில் உள்ள அனைத்து விட உம்மை நான் நேசிக்கிறேன் இந்த உலக உறவு செல்வத்தை விட உம் அன்பை நேசிக்கிறேன் 1. என் பெலவீன நேரத்திலே எனக்கு பெலனாய் வந்தவரே என் சுகவீன நேரத்தில் எனக்கு சுகத்தை தந்தவரே --நீர் மாத்ரம் 2. நான் பாவியாய் இருந்த போதும் என்னை தேடி வந்தவரே என் மேல் பாசம் வைத்ததனால் உம் ஜீவனை தந்தவரே- நீர் மாத்ரம் 3. என் கண்ணீரின் வாழ்க்கையிலே எனக்கு ஆறுதலானவரே நான் கலங்கிடும் வேளையில் எனைத் தேற்றிட்ட சிநேகிதரே 4. நான் தனிமையில் நின்றபோது எனக்கு துணையாய் வந்தவரே ஒரு தகப்பனைப் போல் என்னை இம்மட்டும் சுமந்தவரே