பாடல் #32182
ஸ்தோத்திரம் இயேசு நாதா
🎙 சாது. C. செல்வராஜ்
ஸ்தோத்திரம் இயேசு நாதா - நாதா - நாதா -2 தோத்திரம் துதி உமக்கென்றும் என்றென்றும் -2 1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - தேவா தோத்திரம் உமக்கென்றும் -2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்றென்றுமே -2 2. தூயவர் இயேசுவே - தேவா துதிமிகு தேவனே -2 துதியே துதியே துதியே உமக்கென்றும் -2 3. மகிமை நிறைந்தவரே - தேவா, மகத்துவமானவரே -2 துதி கனம் மகிமை நிறைந்த நல்ல தேவனே 2 4. சுத்த ஜீவியமதை - தேவாதம் பக்தருக்களிப்பவரே -2 சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பவரே -2 5. சக்தி இல்லாதோர்க்கு - தேவா சக்தி அளிப்பவரே -2 சக்தியும் பெலமும் புத்தியுமளிப்பவரே -2 6. எல்லாம் மாயையே - உலகில் காண்பதெல்லாம் மாயையே -2 என்றும் மெய்யானவர் இயேசு ஒருவரே -2 7. உம் திருப்பாதங்களை - தேவா இப் பரதேசிகள் பணிய -2 பரம பிதாவே பரிவுடன் இறங்கினீரே -2