பாடல் #32151
ஜெபம் கேளும் கிருபை தாருமே
🔤 Jebam Kaelum Kirupai Thaarumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபம் கேளும், கிருபை தாருமே, ஜெபம் கேளும். 1. கண்களில் காண்பவை யாவும் அநித்தியம், காணப்படாதவை யாவுமே நித்தியம், கருத்துடன் உணர்ந்து கர்த்தனைப் பணிய உணர்வு உணர்வு தாருமே. 2. என் பெலன் யாவும் என்னை விட்டாலும், நின் பெலனில் யான் நிலைபெறச் செய்யும் வெண்மை நீர் தாரும் வல்லமையை தேவா! வன்மை வண்மை தாருமே 3. கையில் காசும் கண்டிடும் கனா போல வையக மீதினில் கை விட்டோடிடும் மெய்ப்பொருளும் நின் அருள் மகிழ. இருளை அருளைத் தரும், 4. துன்பங்கள் சூழ, ஞானமும் மூழ்க, இன்பங்கள் மாற கண்ணீரும் ஊற்றி, உம் பரலோக ஞானம் பெற்று றவே ஞானம் ஞானம் தாருமே 5. அழகின் பெருமை அழிவை தான் தருமே, அணிந்திடும் அழகும் ஆக்கினையாமே, தேவ பக்தியாம் தேக சிங்காரம் பக்தி பக்தி தாருமே, 6. கர்த்தனே! உம்மில் கனிவுடன் மகிழ, கர்த்தர் நீரேற்ற சிலுவையைப் புகழ், கற்புடன் உய்தன் தொண்டு யார் புரிய கற்பு கற்பு தாருமே 7. ஈகிறேன், ஐயா! என்னை மெய்யாய் ஆத்துமா ஆவி தேகம் உமக்காய்: ஏற்றுக்கொள், ஐயா அன்புடன் உய்ய, அன்பு அன்பு தாருமே 8. மாம்ச சுபாவத்தை மனதார அழிக்க, திவ்விய சுபாவத்தை தீர்க்கமாய் தரிக்க , தூய! நின் வருகையில் தூய்மையாய் காண தூய்மை-தூய்மை தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebam Kaelum, Kirupai Thaarumae, Jebam Kaelum. 1. Kankalil Kaanpavai Yaavum Anitthiyam, Kaanappataadhavai Yaavumae Nitthiyam, Karutthudan Unarnthu Kartthanaip Paniya Unarvu Unarvu Thaarumae. 2. En Pelan Yaavum Ennai Vittaalum, Nin Pelanil Yaan Nilaiperach Seyyum Venmai Neer Thaarum Vallamaiyai Thaevaa! Vanmai Vanmai Thaarumae 3. Kaiyil Kaasum Kantitum Kanaa Pola Vaiyaka Meethinil Kai Vittotitum Meypporulum Nin Arul Makizha. Irulai Arulaith Tharum, 4. Thunbanggal Soozha, Njaanamum Moozhka, Inbanggal Maara Kanneerum Oorri, Um Paraloga Njaanam Perru Ravae Njaanam Njaanam Thaarumae 5. Azhakin Perumai Azhivai Thaan Tharumae, Aninthitum Azhakum Aakkinaiyaamae, Thaeva Pakthiyaam Thaega Singkaaram Pakthi Pakthi Thaarumae, 6. Kartthanae! Ummil Kanivudan Makizha, Kartthar Neeraertra Siluvaiyaip Pugazh, Karpudan Uythan Thontu Yaar Puriya Karpu Karpu Thaarumae 7. Eekiraen, Aiyaa! Ennai Meyyaay Aatthumaa Aavi Thaegam Umakkaay: Aerrukkol, Aiyaa Anpudan Uyya, Anpu Anpu Thaarumae 8. Maamsa Supaavatthai Manathaara Azhikka, Thivviya Supaavatthai Theerkkamaay Tharikka , Thooya! Nin Varukaiyil Thooymaiyaay Kaana Thooymai-thooymai Thaarumae