பாடல் #32148
நான் உன்னத அழைப்பில்
🔤 Naan Unnatha Azhaippil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நான் உன்னத அழைப்பில் தெரிந்தெடுத்து உன்னை எனக்கு பிரித்தெடுத்தேன்; கீழ்ப்படிவதினால் பரிசுத்தம் ஆவதால், பரதேசிகளானவரே கிருபை, கிருபை, கிருபை பெருக தேவ சமாதானம் உன்னில் பெருக ஜீவ நம்பிக்கை ஈந்திட இரக்கத்தினால் உன்னை ஜெனிப்பித்தேனே 2. நித்திய நோக்கம் என்னில் நிறைவேறிட இரத்தத்தால் முற்றும் கழுவினேனே நித்திய ஆவியால் அபிஷேகம் செய்து சத்திய சுவிசேஷம் தந்தேன். 3. பொன்னை அக்கினியால் புடமிடுவது போலே விசுவாசத்தைப் பரிசோதித்தேன் மனம் கலங்கிடாதே, உள்ளம் சோர்ந்திடாதே, உன்னில் கிருபையை ஊற்றிடுவேன் . 4. மா பரிசுத்தரான ஆசாரியரே நீங்கள் மனுஷரால் தள்ளப்படினும் முன் அறிவின்படி தெரிந்தெடுக்கப்பட்டு பூவில் ஜீவிக்க கிருபை செய்தேன். 5. பெரிதல்ல இப்பத்து நாள் பாடுகளே எந்தன் திரு முகம் நோக்கிடுவீர் மரணம் வரையும் உண்மையாக இருந்தால் தருவேன் ஜீவ கிரீடத்தையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naan Unnatha Azhaippil Therinthetutthu Unnai Enakku Piritthetutthaen; Keezhppativathinaal Parisuttham Aavathaal, Parathaesigalaanavarae Kirupai, Kirupai, Kirupai Peruga Thaeva Samaathaanam Unnil Peruga Jeeva Nampikkai Eenthida Irakkatthinaal Unnai Jenippitthaenae 2. Nitthiya Nokkam Ennil Niraivaerida Ratthatthaal Murrum Kazhuvinaenae Nitthiya Aaviyaal Apishaegam Seythu Satthiya Suvisaesham Thanthaen. 3. Ponnai Akkiniyaal Pudamituvathu Polae Visuvaasatthaip Parisothitthaen Manam Kalangkitaathae, Ullam Sornthitaathae, Unnil Kirupaiyai Oorrituvaen . 4. Maa Parisuttharaana Aasaariyarae Neenggal Manusharaal Thallappatinum Mun Arivinbati Therinthetukkappattu Poovil Jeevikka Kirupai Seythaen. 5. Peridhalla Ippatthu Naal Paatugalae Endhan Thiru Mugam Nokkituveer Maranam Varaiyum Unmaiyaaga Irunthaal Tharuvaen Jeeva Kireedatthaiyae