பாடல் #32146
பூதலத்தில் புண்ணியனைப்
🔤 Poodhalatthil Punniyanaip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூதலத்தில் புண்ணியனைப் புகழ்வோம்; பாதுகாத்த தயவில் அக மகிழ்வோம் சூதுகட்கிரையாகி விடாமலே சூழ்ச்சி செய்தாரே காதலி தெமை கண்மணி போலவே. 1. மேதினில் மேன்மை கனம் அவர்க்கே! பேதை கட்குப் பேருதவி அவரே - எந்நாளும் சோதனைகளில் சோர்ந்துவிடாமலே - ஆதரவானார் நாதன் இயேசு அடைக்கலமானவர் 2. மாநிலத்தில் மகிமை அவர்க்குரிமை, மனம் உவந்து சாற்றுதல் இனிமை - என்றுமே பாதகர்க்கருள் பரமனளித்திட - பாக்கியம் பெற்றேன் காதல் கொண்டதும் அற்புதமானது! 3. நானிலத்தில் நவ வருடம் இதில் சாநித்யம் தந்து நடத்துவார் - சந்ததம் வான மண்டல மீதிலே இருந்திடும் - வல்லமையான வான சேனைகளே சேவை புரிந்திடும். 4. மன்னவனே முன்னணியில் நின்று அன்னவர் உமதடி பெற்றுமே - அன்பினால் இன்னமும் உமதீவுகள் பெற்று மே - இன்பமுற்றுமே பின்னிடாது பிழைத்திடச் செய்யுமே. 5. கன்மலையும் கோட்டையும் ஆகினீர்! கண்மணி போல் காத்திடுவதும் நீர் - கருத்தாய் வன்மை வானிலும் பூவிலும் நீரன்றி - அடியவர்க்கேது? அத்தை வந்திடும் வல்லவர் வேறில்லை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poodhalatthil Punniyanaip Pugazhvom; Paathukaattha Thayavil Aga Makizhvom Soothugatkiraiyaaki Vitaamalae Soozhchsi Seythaarae Kaadhali Themai Kanmani Polavae. 1. Maethinil Maenmai Kanam Avarkkae! Paethai Katkup Paerudhavi Avarae - Ennaalum Sodhanaigalil Sornthuvitaamalae - Aadharavaanaar Naadhan Yesu Ataikkalamaanavar 2. Maanilatthil Makimai Avarkkurimai, Manam Uvanthu Saarrudhal Inimai - Enrumae Paadhakarkkarul Paramanalitthida - Paakkiyam Perraen Kaadhal Kondathum Arpudhamaanathu! 3. Naanilatthil Nava Varudam Ithil Saanithyam Thanthu Natatthuvaar - Sandhatham Vaana Mandala Meethilae Irunthitum - Vallamaiyaana Vaana Saenaigalae Saevai Purinthitum. 4. Mannavanae Munnaniyil Ninru Annavar Umathati Perrumae - Anpinaal Innamum Umatheevugal Perru Mae - Inbamurrumae Pinnitaathu Pizhaitthidach Seyyumae. 5. Kanmalaiyum Kottaiyum Aakineer! Kanmani Pol Kaatthituvathum Neer - Karutthaay Vanmai Vaanilum Poovilum Neeranri - Atiyavarkkaethu? Atthai Vanthitum Vallavar Vaerillai.