பாடல் #32137
மகிபனைத் இயேசு எம்மைச் சந்திக்க
🎙 கிறிஸ்தவ பாடல்
மகிபனைத் இயேசு எம்மைச் சந்திக்க மகிதலம் அதிவேகம் வருகிறார், ஆனந்தம்! 1. கிறிஸ்துவுக்குள்ளே மரித்த பல கணக்கில்லா பக்தர் தூதருடன் எக்காளம் தொனிக்கையிலே இயேசுவுடனே வந்திடுவார் 2. கிறிஸ்து வரவின் அடையாளங்கள் உலகில் எங்கும் தோன்றுதே நினையாத நேரத்தில் வந்திடுவார் விழித்திருப்போம். 3. மண்ணுலகின்பம் அனுபவித்தே மடிந்திடுதே பல கோடி ஜனம் பரிதபித்தே புறப்படுவார் பரன் வருகைதனைச் சாற்றிடவே 4. இராக்காலம் வேகம் கடந்திடுதே. கிருபையின் வாசல் அடைபடுதே தருணமிதே சாற்றிடவே, திரு சுவிசேஷம் மானிடர்க்கே 5. பூரண ராகிப் பறந்திடவே, பொற்பரனோடு வாழ்ந்திடவே அவர் பாதை தொடர்ந்திடுவோம் அன்பரின் வருகை நெருங்கிடுதே. 6. ஆதி விசுவாசமும், நம்பிக்கையும், ஆண்டவன் பட்டம் கொண்ட அன்பும், கடைசி வரை காத்துக்கொள்வேன், கருணையின் தேவன் வருகிறார்.