பாடல் #32136
வல்லமை தேவன் உன் தேவன்
🔤 Vallamai Devan Un Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வல்லமை தேவன் உன் தேவன் அல்லல்கள் போக்கும் அண்ணலிவர் தொல்லைகள் சூழும் நேரத்தில் எல்லையில்லா மகிழ்வீந்திடுவார் கலங்காதே திகையாதே விசுவாசியே வலக்கரம் பிடித்து ன்னை நடத்திடுவார் நலமுடன் உந்தனைக் காப்பவரே நலிவுகள் நீக்கிடும் நல்லவரே 2. கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவாய் அறியாமை நீக்கி வாழ்ந்திடுவாய் சிறியவன் ஆயிரம் பதினாயிரம் முறையாக வளர்ந்திடும் நாளிதுவே 3. எல்லாம் செய்திட பலன் தருவார் இல்லாமை என்றும் ஒழித்திடுவாம் பொல்லா உலகினில் ஜெயம் தரவே சொல்லால் உன்னைத் தேற்றிடுவார் 4. மகிமை மேல் மகிமை தந்திடுவார் அகிலம் படைத்த மனுவேலன் இகத்தினில் ஒரே சிந்தையாயிருப்போம் அகமதில் ஆனந்தம் பெற்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vallamai Devan Un Devan Allalkal Pokkum Annalivar Thollaigal Soozhum Naeratthil Ellaiyillaa Makizhveenthituvaar Kalangkaathae Thikaiyaathae Visuvaasiyae Valakkaram Pititthu Nnai Natatthituvaar Nalamudan Undhanaik Kaappavarae Nalivugal Neekkitum Nallavarae 2. Kiristhuvin Sinthai Tharitthituvaay Ariyaamai Neekki Vaazhnthituvaay Siriyavan Aayiram Pathinaayiram Muraiyaaga Valarnthitum Naalithuvae 3. Ellaam Seythida Palan Tharuvaar Illaamai Enrum Ozhitthituvaam Pollaa Ulakinil Jeyam Tharavae Sollaal Unnaith Thaerrituvaar 4. Makimai Mael Makimai Thanthituvaar Akilam Pataittha Manuvaelan Igatthinil Orae Sinthaiyaayiruppom Agamathil Aanandham Perrituvom