பாடல் #32126
நம்ப முடியா உலகம்
🔤 Namba Mutiyaa Ulakam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்ப முடியா உலகம் தான டா- இது நம்ப முடியா உலகம் தானடா பளபளக்கும் மினுமினுக்கும் பழம் போல் பல்லிளிக்கும் நம்பி நீ கை நுழைத்தால் பாம்பென படமெடுக்கும் 1. பொய்யான வார்த்தை சொல்லி மதம் மாற்றுவார் - எங்கள் மெய் தெய்வம் இயேசு உந்தன் மனம் மாற்றுவார் பாடு துன்பம் இந்த உலகில் பேரின்பம் அந்த உலகில் தந்திடுவார் நம்பி வந்திடுவாய் 2. ஐஸ்வர்யம் பெருக என்று இவர் கூறுவார் - சிலர் அதின்மேல் நம்பிக்கை வைத்தே தடுமாறுவார் தீமைக்கு அது வேராகும் தீயவர்க்கு சொந்தமாகும் கண்டிடுவாய் வேதம் நம்பிடுவாய் 3. மெய்யுலகம் சேர்க்க இயேசு வழிகாட்டுவார் - பலர் பொய்யுலக வாழ்வு இதில் சுகம் தேடுவார் பாடு துன்பம் சாபம் என்பார் மெய்வழியை மறைத்திடுவார் தப்பிடுவாய் நீ தப்பிடுவாய் 4. செங்கடலை பிளந்துவிட்டது மோசேயின் கோலோ - அந்த கோலியாத்தை வீழ்த்தியதும் தாவீதின் கல்லோ போவாசின் அன்னையவள் ராகாபை வேசியென்பார் என்ன சொல்வேன் நான் என்ன சொல்வேன் 5. சத்தியத்தை சிலுவையிலே மீண்டும் அறைவார் - இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தை காலால் மிதிப்பார் நன்மை செய்யும் இயேசுவையும் வெண்கல சர்ப்பம் என்பார் என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namba Mutiyaa Ulakam Thaana Taa- Ithu Namba Mutiyaa Ulakam Thaanataa Palapalakkum Minuminukkum Pazham Pol Pallilikkum Nampi Nee Kai Nuzhaitthaal Paampena Patametukkum 1. Poyyaana Vaartthai Solli Matham Maarruvaar - Enggal Mey Theyvam Yesu Undhan Manam Maarruvaar Paatu Thunbam Indha Ulakil Paerinbam Andha Ulakil Thanthituvaar Nampi Vanthituvaay 2. Aisvaryam Peruga Enru Ivar Kooruvaar - Silar Athinmael Nampikkai Vaitthae Thatumaaruvaar Theemaikku Athu Vaeraakum Theeyavarkku Sondhamaakum Kantituvaay Vaedham Nampituvaay 3. Meyyulakam Saerkka Yesu Vazhikaattuvaar - Palar Poyyulaka Vaazhvu Ithil Sugam Thaetuvaar Paatu Thunbam Saabam Enpaar Meyvazhiyai Maraitthituvaar Thappituvaay Nee Thappituvaay 4. Senggatalai Pilanthuvittathu Mosaeyin Kolo - Andha Koliyaatthai Veezhtthiyathum Thaaveethin Kallo Povaasin Annaiyaval Raakaapai Vaesiyenpaar Enna Solvaen Naan Enna Solvaen 5. Satthiyatthai Siluvaiyilae Meentum Araivaar - Yesu Siluvaiyil Sinthiya Ratthatthai Kaalaal Mithippaar Nanmai Seyyum Yesuvaiyum Venkala Sarppam Enpaar Enna Seyvaen Naan Enna Seyvaen