பாடல் #32120
இளம் வாலிபமே நீ
🔤 Ilam Vaalibamae Nee
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இளம் வாலிபமே நீ பதறாதே இளம் வாலிப காலத்தில் திகையாதே இயேசுவே உந்தன் நங்கூரம் உந்தன் நம்பிக்கை உந்தன் இரட்சிப்பு ஆண்டவரின் பாதத்தில் காத்திருத்தல் கோழையின் செயல் என்று எண்ணாதே காத்திருப்பவன் தன் வாலிப காலத்தில் மிகுந்த பலன் அடைவான் மலராத நல் மொட்டு இதழ்களை அவசரப்பட்டு விரித்துவிட்டால் இறைவன் அளிக்கும் நல் மனமின்றி கால்களில் மிதிபட்டுமே காத்திருக்க மனமில்லாமல் சவுல் தன் அரசை இழுந்தானே காத்திருந்த நல் தாவீது மேய்ப்பன் சிறந்த ராஜாவானான் பதறிய அம்னோன் பாவம் செய்து தந்தைக்கு அவமானம் அளித்தானே பதறாத யோசேப்பு கர்த்தரின் கரத்தில் உயர உயர்த்தப்பட்டான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilam Vaalibamae Nee Patharaathae Ilam Vaaliba Kaalatthil Thikaiyaathae Yesuvae Undhan Nangkooram Undhan Nampikkai Undhan Iratsippu Aandavarin Paadhatthil Kaatthirutthal Kozhaiyin Seyal Enru Ennaathae Kaatthiruppavan Than Vaaliba Kaalatthil Mikundha Palan Ataivaan Malaraadha Nal Mottu Idhazhkalai Avasarappattu Viritthuvittaal Iraivan Alikkum Nal Manaminri Kaalkalil Mithibattumae Kaatthirukka Manamillaamal Savul Than Arasai Izhunthaanae Kaatthirundha Nal Thaaveethu Maeyppan Sirandha Raajaavaanaan Pathariya Amnon Paavam Seythu Thanthaikku Avamaanam Alitthaanae Patharaadha Yosaeppu Karttharin Karatthil Uyara Uyartthappattaan