பாடல் #32112
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
🎙 கிறிஸ்தவ பாடல்
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ வாழ்ந்து சுகித்திருப்பாய் உன்னை பெயர் சொல்லி அழைத்த உன் தேவன் அவர் உண்மையுள்ளவர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார் உன்னை கீழாகாமல் என்றும் மேலாக்குவார் உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் உன் சத்துருக்கள் முன் உன்னை உயர்த்திடுவார் உன் களஞ்சியத்தை அவர் நிறைவாக்குவார் கர்த்தருக்குள் பயந்தவர் யாவருக்கும் ஆசீர்வாதம் அளித்திடுவார் நீ அநேக ஜாதிக்கு கடன் கொடுப்பாய் நீ என்றென்றைக்கும் கடன் வாங்காதிருப்பாய் நீ கொண்டு செய்யும் வேலை அனைத்தையும் எல்லாம் ஆசீர்வாதம் தந்திடுவார்