பாடல் #32107
என்னிடத்தில் எதிர்பார்க்கும்
🎙 Evg. தாவீது ராஜா • 💿 ஆவியானவரின் அற்புதப் பாடல்கள்
என்னிடத்தில் எதிர்பார்க்கும் உம் உத்தமும் என்னிடத்தில் இல்லை இல்லை நீதியுள்ள நியாயாதிபதி நீர் என் பாவங்களை மன்னியும் வறுமையின் கோட்டினிலே வாடி நின்றேனைய்யா வருத்தம் துன்பத்திலே நான் வாடி தவித்தேன் ஐயா அன்பான என் தேவா என்னைப் பாரும் ஆறுதல் கரத்தினால் என்னைத் தேற்றும் உலகத்தில் நடுவினிலே நான் பட்ட மரம் போலானேன் எல்லா மக்கள் மத்தியில் நான் பைத்தியம் போலானேன் காண்கின்ற என் தேவா கண்பாரும் கருணையாய் என்னை ஏந்திக்கொள்ளும் உலகத்தின் வெளிச்சம் நீர் என்னிலே பிரகாசிக்கும் உத்தமரே உம் வழியில் நான் நடக்க அருள் புரியும் அன்பான என் தேவா இறங்கி வாரும் என் ஏக்கம் எல்லாம் ஆசீர்வதியும்