பாடல் #32098
பொல்லாத உலகமப்பா
🎙 Evg. தாவீது ராஜா • 💿 ஆவியானவரின் அற்புதப் பாடல்கள்
பொல்லாத உலகமப்பா உன்னை தான் கொல்லுமப்பா மனந்திரும்பி நீ வாப்பா உன்னை மகிமையில் சேர்ப்பார் என் இயேசப்பா ஜனத்திற்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் பூமியிலே உண்டாகும் ஐயோ அப்பா கடைசி காலம் என்று நீ உணர்ந்து கொள் பாதாளம் உண்டென்று நீ அறிந்து கொள் மீட்பர் ஒருவர் உண்டு என்பதை புரிந்து கொள் மனம் திரும்பி வந்து அவரைப் பற்றிக் கொள் சொர்க்கத்தின் திறவுகோல் இயேசுவிடமே பக்தியாய் நீ நடந்தால் சேர்ந்து கொள்வார் உன்னையே உலகத்தை நீ வெறுத்து சிலுவையை சுமந்தால் அடைந்திடுவாய் அன்பின் நித்திய ஜீவனையே