பாடல் #32096
ஒரு நாளும் உனை மறவாத
🔤 Oru Naalum Unai Maravaadha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நாளும் உனை மறவாத உமைப் பிரியாத வரம் வேண்டுமே நீரின்றி நான் வாழ முடியாதே ஐயா உன் துணையின்றி வாழ்வது வாழ்வாகுமோ உந்தன் தயவால் நான் சிறப்புடன் புது சிருஷ்டியாக வாழ்ந்திடுவேன் அல்லேலுயா -3- ஆராதனை இந்த மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் என் உள்ளம் அதை அறிந்தவர் நீரே என்னை அறிந்த தெய்வம் நீரே ஐயா என்னை புரிந்து கொண்ட தெய்வம் நீரே ஐயா அல்லேலுயா -3- ஆராதனை ஊரும் உறவும் என்னை வெறுத்தே என் உள்ளம் நொந்து சோகமானது என் உள்ளம் அறிந்து ஓடிவந்தீரே என்னை அள்ளி அணைத்துக் கொண்டீரே அல்லேலுயா -3- ஆராதனை மாறாத தெய்வம் நீரே ஐயா - ஒரு மாசில்லா வரம் நீரே ஐயா மகிமை நிறைந்த மன்னவரே மனதை கவர்ந்த என் நாயகரே அல்லேலுயா -3- ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Naalum Unai Maravaadha Umaip Piriyaadha Varam Vaentumae Neerinri Naan Vaazha Mutiyaathae Aiyaa Un Thunaiyinri Vaazhvathu Vaazhvaakumo Undhan Thayavaal Naan Sirappudan Puthu Sirushtiyaaga Vaazhnthituvaen Allaeluyaa -3- Aaraadhanai Indha Manidhano Mugatthaip Paarkkiraan En Ullam Athai Arindhavar Neerae Ennai Arindha Theyvam Neerae Aiyaa Ennai Purinthu Konda Theyvam Neerae Aiyaa Allaeluyaa -3- Aaraadhanai Oorum Uravum Ennai Verutthae En Ullam Nonthu Sogamaanathu En Ullam Arinthu Otivantheerae Ennai Alli Anaitthuk Konteerae Allaeluyaa -3- Aaraadhanai Maaraadha Theyvam Neerae Aiyaa - Oru Maasillaa Varam Neerae Aiyaa Makimai Niraindha Mannavarae Manathai Kavarndha En Naayakarae Allaeluyaa -3- Aaraadhanai