பாடல் #32085
இரத்தம் இயேசு இரத்தம்
🔤 Rattham Yesu Rattham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவ அழுக்கையும் கழுவுமே இரத்தம் இயேசு இரத்தம் எல்லா அவயவம் யாவையும் சுத்தம் செய்யும் ஆதிகாலத்தில் வியாதியாவும் அற்புதமாய் சொஸ்தப்படுத்தியவர் ஆத்துமா எல்லாம் இரட்சியும் ஐயா ஆத்ம நாயகன் இயேசையா வியாதி நேரத்தில் பரிகாரி நீரே பரம ஒளஷதம் நீர்தானையா பிசாசின் பிடியில் விடுதலை தாரும் மாறாத உம் இரத்தம் வல்லமையால் ஐந்து காயங்கள் ஆறாக ஓட இரத்த வெள்ளம் சொரிந்தீரையா பாவியாம் என்னை மன்னியும் என்று ! கெஞ்சும் இந்த வேளையிலே வெள்ளியல்ல பொன்னுமல்ல விலையாக சிலுவையில் நீர் கொடுத்தீர் விலையேறிய இரத்தம் எனக்காக ஈந்து சொந்தமாக என்னை கொண்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Rattham Yesu Rattham Ellaa Paava Azhukkaiyum Kazhuvumae Rattham Yesu Rattham Ellaa Avayavam Yaavaiyum Suttham Seyyum Aathikaalatthil Viyaathiyaavum Arpudhamaay Sosthappatutthiyavar Aatthumaa Ellaam Iratsiyum Aiyaa Aathma Naayakan Yesaiyaa Viyaathi Naeratthil Parikaari Neerae Parama Olashatham Neerthaanaiyaa Pisaasin Pitiyil Vitudhalai Thaarum Maaraadha Um Rattham Vallamaiyaal Ainthu Kaayanggal Aaraaga Oda Rattha Vellam Sorintheeraiyaa Paaviyaam Ennai Manniyum Enru ! Kenjsum Indha Vaelaiyilae Velliyalla Ponnumalla Vilaiyaaga Siluvaiyil Neer Kotuttheer Vilaiyaeriya Rattham Enakkaaga Eenthu Sondhamaaga Ennai Konteer