பாடல் #32075
இன்ப கானானுக்குள் ஏழை செல்ல
🎙 கிறிஸ்தவ பாடல்
1. இன்ப கானானுக்குள் ஏழை செல்ல இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன் 2. பரம சுகங்களின் இனிய ரசம் பரனே சுவோடு யார் பானம் செய்வேன் 3. பரமபிதா வெந்தன் கண்ணின்று அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார் 4. சத்துரு சேனைகள் அங்கே இல்லை இயேசுவின் புத்திரர் மாத்திரமே 5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி சிறப்புட னிலங்கிடும் தேசமது 6. கேரூபின் சேராபீன்கள் பாடிடவே மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே 7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாத சொர்லோக நாட்டுக்கோர் இணையில்லேயே 8. பரிசுத்த ஆவியின் பளிங்கு நதி பளபளென் றொழுகிடும் தேசமது 9. ஜீவ விருட்சம் மங்காற்றருகில் மாதந்தோறும் புதுக் கனி தரும் 10. நவரத்தின நிர்மித பட்டணத்தில் இராப்பகல் சூரியன் இயேசு தாமே