பாடல் #32071
கடைசி காலம் இதுவே
🔤 Kataisi Kaalam Ithuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடைசி காலம் இதுவே காலையிலோ மாலையிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ ஜீவாதிபதி இயேசு ராஜ ராஜன் சீக்கிரம் வருகிறார் 1. மோச உலகம் நாசமடையும் மாய வேஷங்கள் கடந்து போகும் உலக ஆசைகள் மனதை மயக்கும் உயர்ந்த பரிசுத்த வாழ்வே போதும் 2. பூமி அதிர்ச்சி பஞ்சம் பசியும் பாரில் வேதனை ஆரம்பமாகும் பகைகள் யுத்தங்கள் பரவும் கொள்ளை நோய் இவைகள் முடிவின் அடையாளங்கள் 3. கள்ள கிறிஸ்துக்கள் எங்கும் எழும்பி கூடுமானாலோ வஞ்சிப்பார் நம்மை அசுத்த ஆவியும் அற்புதம் செய்திடும் அதை நிதானித்து நாம் எதிர்ப்போம் 4. காட்டிக் கொடுக்கும் கேட்டின் மகனே கள்ளத் துரோகியாம் யூதாஸின் ஆவி நல்லோரை பகைக்கும் நன்மையைக் கெடுக்கும் பொல்லங்கள் ஒழிந்திட நாம் ஜெபிப்போம் 5. ஏசு வருவார் நம்மை அழைக்க ஏறி செல்லுவோம் மேகத்தில் நாம் தலையை உயர்த்தி நிமிர்ந்து நோக்குவோம் திரும்பி வருகிறார் அன்புடனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kataisi Kaalam Ithuvae Kaalaiyilo Maalaiyilo Saeval Koovitum Naeratthilo Jeevaathibathi Yesu Raaja Raajan Seekkiram Varukiraar 1. Mosa Ulakam Naasamataiyum Maaya Vaeshanggal Katanthu Pokum Ulaka Aasaigal Manathai Mayakkum Uyarndha Parisuttha Vaazhvae Pothum 2. Poomi Athirchsi Panjjam Pasiyum Paaril Vaedhanai Aarambamaakum Pakaigal Yutthanggal Paravum Kollai Noy Ivaigal Mutivin Ataiyaalanggal 3. Kalla Kiristhukkal Engkum Ezhumpi Kootumaanaalo Vanjsippaar Nammai Asuttha Aaviyum Arpudham Seythitum Athai Nithaanitthu Naam Ethirppom 4. Kaattik Kotukkum Kaettin Makanae Kallath Thurokiyaam Yoothaasin Aavi Nallorai Pakaikkum Nanmaiyaik Ketukkum Pollanggal Ozhinthida Naam Jepippom 5. Aesu Varuvaar Nammai Azhaikka Aeri Selluvom Maegatthil Naam Thalaiyai Uyartthi Nimirnthu Nokkuvom Thirumpi Varukiraar Anpudanae