பாடல் #32065
கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
🔤 Karttharaip Paatiyae Porrituvomae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல கருணையோடிரக்கம் கரையில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப் போல் வேறு நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெரு வெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேளைக்கு எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான் ஜீவித்து சேவிக்க திடமளித்தார் 4. கல்லும் முள்ளுகள் உள்ள கடின பாதையிலே கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும் வல்லவர் இயேசு நம் முன்னே செல்கிறார் 5. சீயோனை சிறப்புடன் சேர்த்திட இயேசு சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே முகமுகமாகவே காண்போமே அவரை யுகாயுகமாகவே வாழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Karttharaip Paatiyae Porrituvomae Karutthudan Thuthippom Iniya Naamamathai Katalin Aazham Pola Karunaiyotirakkam Karaiyillai Avaranpu Karaiyartrathae Yesu Nallavar Yesu Vallavar Yesuvaip Pol Vaeru Naesarillaiyae 2. Kotumaiyor Seeral Peru Vellam Pola Atikkaiyil Mothiyae Mathilkalin Meethae Pelanum Ivvaelaikku Eliyorkkum Thidanaay Veyilukku Othungkum Vin Nizhalumaanaar 3. Poraattam Sodhanai Ninthai Avamaanam Koramaay Vanthum Kirupaiyil Nilaikka Thaeva Kumaaranin Visuvaasatthaalae Naan Jeevitthu Saevikka Thidamalitthaar 4. Kallum Mullugal Ulla Katina Paathaiyilae Kalakkanggal Nerukkanggal Agamathai Varuttha Ellaiyillaa Ethir Emakku Vanthaalum Vallavar Yesu Nam Munnae Selkiraar 5. Seeyonai Sirappudan Saertthida Yesu Seekkiram Varum Naal Nerungki Vanthituthae Mugamugamaagavae Kaanpomae Avarai Yukaayugamaagavae Vaazhnthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm Am C D G Em Am C D7 G G C Am D7 G G Bm Am C D G Em Am C D7 G G Bm Am C D G Em Am C D7 G G Bm Am C D G Em Am C D7 G