பாடல் #32062
துதிக்கின்றோம் தூயா திரியேக
🔤 Thuthikkinrom Thooyaa Thiriyaega
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கின்றோம் தூயா திரியேக தேவன் தேவா துதி கேட்டு மகிழ்வீர் என் இயேசுவே மகிமையின் தேவனே நீதியின் ராஜனே உம் சித்தம் செய்யவே தந்தேன் 1. அபிஷேகம் தந்து எம்மை சாட்சியாய் மாற்றிடுமே வல்லமை வரங்களால் நிரப்பிடுமே உலகம் மாமிசம் சாத்தானை ஜெயித்த என் தேவா உத்தமர் இயேசுவே வந்திடுவீர் உத்தமராக எத்தனை மாற்றிட இயேசுவே உம் கிருபை தந்திடுவீர் 2. தேவைகள் நிறைந்திட்ட உலகினில் வாழுகின்றோம் தேவைகள் அனைத்தும் தந்திடுவீர் மகிமையின் தேவனே குறைவெல்லாம் நிறைவாக்கிட சோர்ந்திடாதெம்மை நடத்திடுமே ஆத்தும ஆதாயம் செய்திட எம்மையும் இயேசுவே உம்மைப் போல் மாற்றிடுமே 3. அவமானம் நிந்தைகள் பாடுகள் சகித்திடவே பெலன் தந்திடும் தேவா வந்திடுவீர் மரணமோஜீவனோநாசமோ மோசமோ நாதா உமதன்பை பிரித்திட இயலாதல்லோ எமக்காக நித்தமும் வேண்டுதல் செய்திடும் இயேசுவே ஜெயபாதை நடத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkinrom Thooyaa Thiriyaega Devan Thaevaa Thuthi Kaettu Makizhveer En Yesuvae Makimaiyin Devanae Neethiyin Raajanae Um Sittham Seyyavae Thanthaen 1. Apishaegam Thanthu Emmai Saatsiyaay Maarritumae Vallamai Varanggalaal Nirappitumae Ulakam Maamisam Saatthaanai Jeyittha En Thaevaa Utthamar Yesuvae Vanthituveer Utthamaraaga Etthanai Maarrida Yesuvae Um Kirupai Thanthituveer 2. Thaevaigal Nirainthitta Ulakinil Vaazhukinrom Thaevaigal Anaitthum Thanthituveer Makimaiyin Devanae Kuraivellaam Niraivaakkida Sornthitaathemmai Natatthitumae Aatthuma Aathaayam Seythida Emmaiyum Yesuvae Ummaip Pol Maarritumae 3. Avamaanam Ninthaigal Paatugal Sakitthidavae Pelan Thanthitum Thaevaa Vanthituveer Maranamojeevanonaasamo Mosamo Naathaa Umathanpai Piritthida Iyalaadhallo Emakkaaga Nitthamum Vaentudhal Seythitum Yesuvae Jeyapaathai Natatthituveer