பாடல் #32045
என்னைக் கழுவியருளும்
🔤 Ennaik Kazhuviyarulum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைக் கழுவியருளும் ஈசோப்பினால் சுத்திகரியும் பாவம் துர்க்குணம் பொல்லாப்பு நீங்க உம் இரத்தத்தால் கழுவும் 1. துர்குணத்தில் நான் உருவானேன் உனக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் இரட்சணியத்தின் சந்தோஷத்தை தந்து உற்சாகமான ஆவியால் தாங்கும் 2. கண்களின் இச்சை மாம்ச இச்சை ஜீவனத்தின் பெருமை யாவுமே பிதாவினாலுண்டாகாதவையே என்னை விட்டகற்றிடும் என் இயேசுவே 3. ஆத்துமா மண்ணோடு ஓட்டியதால் ஜென்ம சுபாவம் என்னில் உள்ளது மண்ணின் சாயலை நான்களைந்தே தேவனின் சாயலை அடைந்திடவே 4. கண்கள் காட்சியில் நான் நடந்தேன் நாவினால் பொல்லாங்கு கூறினேனே சிந்தையும் நோக்கமும் தீயவை என்னிலே பரிசுத்தம் ஏதுமில்லை 5. ஜெபிக்க தவறிய காலம் பல அனல் குன்றி வாழ்ந்திட்ட நேரம் பல உம் சித்தம் செய்யாத சமயம் பல வேதத்தை கேளாத வேளை பல 6. பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லௌகிகம் கவலையாலும் எந்தன் இருதயம் பாரமாகாமல் உந்தன் வருகையால் நான் நிற்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaik Kazhuviyarulum Eesoppinaal Sutthigariyum Paavam Thurkkunam Pollaappu Neengga Um Ratthatthaal Kazhuvum 1. Thurkunatthil Naan Uruvaanaen Unakku Virodhamaay Paavanjseythaen Iratsaniyatthin Santhoshatthai Thanthu Ursaagamaana Aaviyaal Thaangkum 2. Kankalin Ichsai Maamsa Ichsai Jeevanatthin Perumai Yaavumae Pithaavinaaluntaakaadhavaiyae Ennai Vittakarritum En Yesuvae 3. Aatthumaa Mannotu Ottiyathaal Jenma Supaavam Ennil Ullathu Mannin Saayalai Naankalainthae Devanin Saayalai Atainthidavae 4. Kankal Kaatsiyil Naan Natanthaen Naavinaal Pollaangku Koorinaenae Sinthaiyum Nokkamum Theeyavai Ennilae Parisuttham Aethumillai 5. Jepikka Thavariya Kaalam Pala Anal Kunri Vaazhnthitta Naeram Pala Um Sittham Seyyaadha Samayam Pala Vaedhatthai Kaelaadha Vaelai Pala 6. Perunthintiyinaalum Veriyinaalum Laukigam Kavalaiyaalum Endhan Irudhayam Paaramaakaamal Undhan Varukaiyaal Naan Nirkavae