பாடல் #32044
பாவியாயிருக்கையில் நேசரே
🔤 Paaviyaayirukkaiyil Naesarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவியாயிருக்கையில் நேசரே எனக்காக மரித்தீர் பாவவாழ்வினின்று இயேசுவே நேசித்துப் பிரித்தீர் பரதேசி போலவே அலைந்திடும் எனக்காய் பரனேசுவை நீர் உயிர் கொடுத்தீர் 1. தாயின் கர்ப்பத்தில் தெரிந்து கொண்டீர் கண்மணி போலவே காத்து வந்தீர் தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர் தகப்பனே என்னை தூக்கி சுமந்தீர் 2. கல்வாரி வரை என்னை அழைத்துச் சென்றீர் சொந்த ரத்தத்தால் சுத்திகரித்தீர் பாவத்தை சாபத்தை முற்றும் அழித்தீர் பரிகாரியே! என்னில் அன்பு பொழிந்தீர் 3. குற்றங்கள் காண்கையில் பெற்றோர் வெறுத்தார் சுற்றத்தார் நண்பர்கள் மற்றும் பகைத்தார் நீர் மட்டும் என்னை விட்டு விலகவில்லை நீச பாவி என்னை வெருக்கவில்லை 4. ஏனய்யா இயேசுவே என்னை தெரிந்தீர் பிரதான பாவியென்றறிந்த போதும் ஏங்கித் தவித்திருந்தேன் இவ்வன்பிற்காய் மாறாத உன் அன்பை எனக்குத் தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaviyaayirukkaiyil Naesarae Enakkaaga Marittheer Paavavaazhvininru Yesuvae Naesitthup Pirittheer Parathaesi Polavae Alainthitum Enakkaay Paranaesuvai Neer Uyir Kotuttheer 1. Thaayin Karppatthil Therinthu Konteer Kanmani Polavae Kaatthu Vantheer Thaayinum Maelaay Anpu Koorntheer Thakappanae Ennai Thookki Sumantheer 2. Kalvaari Varai Ennai Azhaitthuch Senreer Sondha Ratthatthaal Sutthigarittheer Paavatthai Saabatthai Murrum Azhittheer Parikaariyae! Ennil Anpu Pozhintheer 3. Kurtranggal Kaankaiyil Perror Verutthaar Surtratthaar Nanparkal Marrum Pakaitthaar Neer Mattum Ennai Vittu Vilakavillai Neesa Paavi Ennai Verukkavillai 4. Aenayyaa Yesuvae Ennai Therintheer Pirathaana Paaviyendrarindha Pothum Aengkith Thavitthirunthaen Ivvanpirkaay Maaraadha Un Anpai Enakkuth Thantheer