பாடல் #32038
நேசர் இயேசுவின் மார்பிலே
🔤 Naesar Yesuvin Maarpilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசர் இயேசுவின் மார்பிலே சார்ந்திருந்தால் பேரின்பமே மகிமையின் சாயலாய் மறுரூபமாகி மகிழ்வினால் உள்ளம் பூரிக்குதே 1. ஆவியின் அருளே பொழிந்திடுமே அன்பினால் இருதயம் நிரம்பிடவே அண்ணலின் கரமே அணைத்திடுதே ஆறுதல் தேறுதல் பெருகிடுதே 2. தூயனாய் என்னையே பிரித்தெடுத்த நேசரின் அன்பு நினைத்திடவே உள்ளத்தால் உவகை உயர்த்திடுதே உன்னத பாடல் பிறந்திடுதே 3. தேவன் சாயல் தரித்திடவே வல்லமை விசுவாசம் பெருகிடுதே சத்தியம் கிருபை இணைந்தென்றுமே நித்திய நம்பிக்கை அளித்திடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesar Yesuvin Maarpilae Saarnthirunthaal Paerinbamae Makimaiyin Saayalaay Maruroobamaaki Makizhvinaal Ullam Poorikkuthae 1. Aaviyin Arulae Pozhinthitumae Anpinaal Irudhayam Nirampidavae Annalin Karamae Anaitthituthae Aarudhal Thaerudhal Perukituthae 2. Thooyanaay Ennaiyae Piritthetuttha Naesarin Anpu Ninaitthidavae Ullatthaal Uvakai Uyartthituthae Unnatha Paadal Piranthituthae 3. Devan Saayal Tharitthidavae Vallamai Visuvaasam Perukituthae Satthiyam Kirupai Inainthenrumae Nitthiya Nampikkai Alitthituthae