பாடல் #32005
தாகத்தை தீருமய்யா
🔤 Thaagatthai Theerumayyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாகத்தை தீருமய்யா அபிஷேகத்தைத் தாருமையா - எங்கள் 1. ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம் ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ ஏக கர்த்தாவே ஏழைகள் மீது இரங்கிடும் இப்போதே - எம்மில் 2. சத்துருவாலே சகிக்க வொண்ணாத எத்தனையோ இடர் வந்ததையோ அத்தனே உமது அருள் பலத்தாலே நித்தமும் ஜெயம் கொள்வோம் நாங்கள் 3. வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல போதகராம் ஆவியானவரே பாதத்தில் வீழ்ந்து பணிந்திடுவோமே பரிசுத்த மாவோமே - நாங்கள் 4. சுத்த ஜீவியமும் தூய ஊழியமும் கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம் சித்தங் கொண்டெம்மை நீர் பாவிப்பதால் மெத்தவும் பலன் காண்போம் நாங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaagatthai Theerumayyaa Apishaegatthaith Thaarumaiyaa - Enggal 1. Aagamam Munnae Arivittha Vannam Aaviyaal Atiyaarai Niraittheerallo Aega Kartthaavae Aezhaigal Meethu Irangkitum Ippothae - Emmil 2. Satthuruvaalae Sakikka Vonnaadha Etthanaiyo Idar Vandhathaiyo Atthanae Umathu Arul Palatthaalae Nitthamum Jeyam Kolvom Naanggal 3. Vaedhatthin Porulai Vilakkida Valla Podhakaraam Aaviyaanavarae Paadhatthil Veezhnthu Paninthituvomae Parisuttha Maavomae - Naanggal 4. Suttha Jeeviyamum Thooya Oozhiyamum Karttharukkaertra Narkaanikkaiyaam Sitthang Kontemmai Neer Paavippathaal Metthavum Palan Kaanpom Naanggal