பாடல் #31994
கிருபையின் காலம் கடந்து போகுதே
🔤 Kirupaiyin Kaalam Katanthu Pokuthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையின் காலம் கடந்து போகுதே நெருங்கிச் சேர நீ வா - வீண் பெருமையை மறந்து கருணை தேவனை விரைந்து சேர வா வா 1. தேவன் இல்லையென்று - தினம் வீணாய் கர்வம் கொண்டு தேடி அழைக்கும் அன்பை - நிதம் நாடிச் சேர நகைத்தாய் தேவையும் ஒன்றே தினம் அவர் பாதம் தேடிச் சேர வருவாய் 2. உலகோர் ஞானமனைத்தும் உனக்கு உதவ ஓடி வருவாய் உலகம் முழுதும் உனதாய் உரிதாக்கினாலும் குறைதான் கலந்திடும் ஜீவன் கன நஷ்டமடைந்தால் இலாபம் இல்லை வா வா 3. கல்வி பெரும் செல்வம் - அவை எல்லாம் உன்னைத் தள்ளும் கல்லும் மண்ணும் உன்னை அது சொல்லும் சாட்சி ஒரு நாள் காரண கர்த்தன் பூரண ரூபன் கனிவாய் அழைக்க வருவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyin Kaalam Katanthu Pokuthae Nerungkich Saera Nee Vaa - Veen Perumaiyai Maranthu Karunai Devanai Virainthu Saera Vaa Vaa 1. Devan Illaiyenru - Thinam Veenaay Karvam Kontu Thaeti Azhaikkum Anpai - Nidham Naatich Saera Nakaitthaay Thaevaiyum Onrae Thinam Avar Paadham Thaetich Saera Varuvaay 2. Ulakor Njaanamanaitthum Unakku Udhava Oti Varuvaay Ulakam Muzhuthum Unathaay Urithaakkinaalum Kuraithaan Kalanthitum Jeevan Kana Nashtamatainthaal Ilaabam Illai Vaa Vaa 3. Kalvi Perum Selvam - Avai Ellaam Unnaith Thallum Kallum Mannum Unnai Athu Sollum Saatsi Oru Naal Kaarana Kartthan Poorana Rooban Kanivaay Azhaikka Varuvaay