பாடல் #31993
வா வா வா இயேசுவண்டை
🔤 Vaa Vaa Vaa Yesuvantai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா வா, வா இயேசுவண்டை வா உன் இதயத்தை அவரிடம் தா (2) 1. தேசத்தில் சமாதானம் இல்லை - ஓ தேசத்திலே இரக்கமும் இல்லை தேசத்தோடு தேவனுக்கு வழக்கு அது சீக்கிரத்தில் மானிடனே இருக்கு 2. கொஞ்ச காலத்திலே தேவ கோபம் - ஓ பற்றி எரிய போகுது நண்பா இயேசுவின் பாதத்தை முத்தம் செய்தால் தேவ கோபத்திற்கு நீ தப்பித்துக் கொள்வாய் 3. தூற்றுக்கூடை இயேசுவிடம் உண்டு உன் களஞ்சியத்தை நன்றாய் விளக்கி பதரையோ அக்கினியில் எரிப்பார் - நல் மணிகளை களஞ்சியத்தில் சேர்ப்பார் 4. வரும் போது கொண்டு வந்ததில்லை நீ போகும் போது கொண்டு செல்வதில்லை எப்படி உலகில் நீ வந்தாயோ - நண்பா அப்படியே மண்ணுக்கு நீ போவாய் 5. நீதிமானே நிற்பது அரிது - ஓ பாவியே நீ எங்கே போய் நிற்பாய் நீதிபரர் இயேசு வருகின்றார் - தம் நேசக்கரம் காட்டி அழைக்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Vaa, Vaa Yesuvantai Vaa Un Idhayatthai Avaridam Thaa (2) 1. Thaesatthil Samaathaanam Illai - O Thaesatthilae Irakkamum Illai Thaesatthotu Devanukku Vazhakku Athu Seekkiratthil Maanidanae Irukku 2. Konjja Kaalatthilae Thaeva Kobam - O Parri Eriya Pokuthu Nanpaa Yesuvin Paadhatthai Muttham Seythaal Thaeva Kobatthirku Nee Thappitthuk Kolvaay 3. Thoorrukkootai Yesuvidam Untu Un Kalanjsiyatthai Nanraay Vilakki Patharaiyo Akkiniyil Erippaar - Nal Manigalai Kalanjsiyatthil Saerppaar 4. Varum Pothu Kontu Vandhathillai Nee Pokum Pothu Kontu Selvathillai Eppati Ulakil Nee Vanthaayo - Nanpaa Appatiyae Mannukku Nee Povaay 5. Neethimaanae Nirpathu Arithu - O Paaviyae Nee Engkae Poy Nirpaay Neethibarar Yesu Varukinraar - Tham Naesakkaram Kaatti Azhaikkinraar