பாடல் #31980
யாக்கோபே நீ என்னுடையவன்
🎙 கிறிஸ்தவ பாடல்
யாக்கோபே நீ என்னுடையவன் நீ என்னால் மறக்கப்படுவதில்லை (2) நான் உன்னை மறந்து விட்டால் - என் வலது கை தன் தொழிலை மறந்து விடும் (2) 1. ஆண்டுகள் தோறும் என் சமூகம் உனக்கு வாக்குத்தத்தம் அருளியது (2) அவைகள் எந்நாளும் மாறாததே மாறாத நேசன் நான் அல்லவோ (2) 2. பயப்படாதே நான் உன் தேவன் நீ என்னால் மறக்கப்படுவதில்லை - உன்னை (2) என் உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன் உன்னை யாரும் தொட முடியாது (2) 3. நான் உனக்கு சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி , குணமாக்கினால் - என் (2) சமாதானம் பரிபூரணமாக கிட்டுமே சத்தியமும் நிறைவாய் நிதம் கிடைத்திடும் (2)