பாடல் #31951
இவ்வழி நெருக்கம் சிநேகித
🔤 Ivvazhi Nerukkam Sinaekidha
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவ்வழி நெருக்கம் சிநேகிதர் சுருக்கம் யாரிதைக் கடந்திடுவார் ஆ ஆ இதல்லோ மோட்ச வழி 1. எப்பக்கத்திலேயும் நெருக்கப்பட்டேன் எல்லா மக்களாலும் கைவிடப்பட்டேன் நிந்தை அவமானம் நெருங்கி வந்தது எந்தையே உம்மாலே இதையெல்லாம் நடந்தேன் 2 கண்ணீரின் நிந்தையால் கறித்துப் போனேன் கர்த்தரே உம்மாலே நிலைத்து நின்றேன் துன்பத்தின் மத்தியில் அன்பரின் சத்தத்தால் இன்பத்துள் ஆனேன் இயேசுவை அடைந்தேன் 3. கர்த்தர் பாதையில் களி த்து நடந்தேன் கடும் புயலினால் மலைத்து நின்றான் ஆவேசம் என்று நான் அலறித் திகைத்தேன் அன்பரின் சத்தத்தால் ஆறுதல் அடைந்தேன் 4. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் அதி சீக்கிரமாய் முடிவதாலே பரிசுத்தமாகுதலை பயத்தோட காத்து கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாவோம் 5. நிந்தை பலவாய் நேசர்கள் கூறினார் எந்தையே உனக்காய் இதை எல்லாம் சகித்தேன் சந்ததம் என்னில் நீர் சொந்தம் பாராட்டினீர் நிந்தையின் வழியில் நேசரை அறிந்தேன் 6. மரண வியாதியில் மனக்கவலையில் கொடிய இருளின் வறுமை மத்தியில் இழந்த வரங்களை ஈந்ததினாலே இயேசுவில் நிலைத்து இம்மட்டும் கடந்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivvazhi Nerukkam Sinaekidhar Surukkam Yaarithaik Katanthituvaar Aa Aa Idhallo Motsa Vazhi 1. Eppakkatthilaeyum Nerukkappattaen Ellaa Makkalaalum Kaividappattaen Ninthai Avamaanam Nerungki Vandhathu Enthaiyae Ummaalae Ithaiyellaam Natanthaen 2 Kanneerin Ninthaiyaal Karitthup Ponaen Karttharae Ummaalae Nilaitthu Ninraen Thunbatthin Matthiyil Anbarin Satthatthaal Inbatthul Aanaen Yesuvai Atainthaen 3. Kartthar Paathaiyil Kali Ththu Natanthaen Katum Puyalinaal Malaitthu Ninraan Aavaesam Enru Naan Alarith Thikaitthaen Anbarin Satthatthaal Aarudhal Atainthaen 4. Parisutthavaankalin Paatugalellaam Athi Seekkiramaay Mutivathaalae Parisutthamaakudhalai Payatthoda Kaatthu Karttharin Varukaikku Aayatthamaavom 5. Ninthai Palavaay Naesarkal Koorinaar Enthaiyae Unakkaay Ithai Ellaam Sakitthaen Sandhatham Ennil Neer Sondham Paaraattineer Ninthaiyin Vazhiyil Naesarai Arinthaen 6. Marana Viyaathiyil Manakkavalaiyil Kotiya Irulin Varumai Matthiyil Izhandha Varanggalai Eendhathinaalae Yesuvil Nilaitthu Immattum Katanthaen