பாடல் #31926
இயேசு ராஜா இதயத்தின் ரோஜா
🔤 Yesu Raajaa Idhayatthin Rojaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா இதயத்தின் ரோஜா உம்மை நான் பாடிடுவேன் ஓயாமல் துதித்திடுவேன் 1. செய்த நன்மைகள் நினைக்கும் போது கண்களில் கண்ணீர் நிறைகிறதே செந்நீர் வழிந்த பாதம் பணிந்து தொழுதிட உள்ளம் துடிக்கிறது வல்ல பிதாவே உமக்கு ஆராதனை வான்புறாவே உமக்கு ஆராதனை ஆராதனை (4) 2. எந்தன் பாவம் எந்தன் சாபம் யாவையும் சிலுவையில் சுமந்திட்டீரே உந்தன் காயம் என்னை சுகமாய் ஆக்கிட வழியும் திறந்திட்டீரே சுகமாக்கும் தெய்வமே ஆராதனை வியாதி முற்றும் நீக்கிடுவீர் ஆராதனை (4) 3. எனக்குள் வந்து எனக்குள் வாழ்ந்து என்னையும் உம்மைப் போல் மாற்றினீரே இதய பலகையில் உந்தன் வசனம் எழுதி என் உயிரில் கலந்திட்டீரே வார்த்தையின் வடிவே ஆராதனை வானம் பூமி படைத்தவரே ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Idhayatthin Rojaa Ummai Naan Paatituvaen Oyaamal Thuthitthituvaen 1. Seytha Nanmaigal Ninaikkum Pothu Kankalil Kanneer Niraikirathae Senneer Vazhindha Paadham Paninthu Thozhuthida Ullam Thutikkirathu Valla Pithaavae Umakku Aaraadhanai Vaanpuraavae Umakku Aaraadhanai Aaraadhanai (4) 2. Endhan Paavam Endhan Saabam Yaavaiyum Siluvaiyil Sumanthitteerae Undhan Kaayam Ennai Sugamaay Aakkida Vazhiyum Thiranthitteerae Sugamaakkum Theyvamae Aaraadhanai Viyaathi Murrum Neekkituveer Aaraadhanai (4) 3. Enakkul Vanthu Enakkul Vaazhnthu Ennaiyum Ummaip Pol Maarrineerae Idhaya Palakaiyil Undhan Vasanam Ezhuthi En Uyiril Kalanthitteerae Vaartthaiyin Vativae Aaraadhanai Vaanam Poomi Pataitthavarae Aaraadhanai