பாடல் #31916
ஆகாமிய கூடாரம்
🔤 Aakaamiya Kootaaram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆகாமிய கூடாரம் வேண்டாம் வேண்டாம் ஆலயம் ஒன்றே போதும் தேவா அந்தியின் வாசஸ்தலம் வேண்டாம் வேண்டாம் தேவா இயேசு தேவா நீரே போதும் நாதா-2 1. பொய்யான உலக வாழ்வு வேண்டாம் வேண்டாம் மெய்யான ஜீவ வாழ்வு போதும் தேவா உலகத்தின் ஆசைகள் வேண்டாம் வேண்டாம் ஊழியத்தின் வாஞ்சை ஒன்றே போதும் தேவா 2. துன்மார்க்க ஆலோசனை வேண்டாம் வேண்டாம் வேதத்தின் தியானம் ஒன்றே போதும் தேவா பாவியின் வழிகள் வேண்டாம் வேண்டாம் பரிசுத்த பாதை ஒன்றே போதும் தேவா 3. உலகத்தின் இச்சைகள் வேண்டாம் வேண்டாம் தேவனின் சித்தம் ஒன்றே போதும் தேவா மாயையான இன்பங்கள் வேண்டாம் வேண்டாம் மகிமையின் மகிழ்ச்சி போதும் 4. பாவத்தின் சந்தோஷங்கள் வேண்டாம் வேண்டாம் பரிசுத்த ஜீவியம் போதும் தேவா எகிப்தின் பொக்கிஷங்களை வேண்டாம் வேண்டாம் இனி வரும் பலன் ஒன்றே போதும் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aakaamiya Kootaaram Vaentaam Vaentaam Aalayam Onrae Pothum Thaevaa Anthiyin Vaasasthalam Vaentaam Vaentaam Thaevaa Yesu Thaevaa Neerae Pothum Naathaa-2 1. Poyyaana Ulaka Vaazhvu Vaentaam Vaentaam Meyyaana Jeeva Vaazhvu Pothum Thaevaa Ulakatthin Aasaigal Vaentaam Vaentaam Oozhiyatthin Vaanjsai Onrae Pothum Thaevaa 2. Thunmaarkka Aalosanai Vaentaam Vaentaam Vaedhatthin Thiyaanam Onrae Pothum Thaevaa Paaviyin Vazhigal Vaentaam Vaentaam Parisuttha Paathai Onrae Pothum Thaevaa 3. Ulakatthin Ichsaigal Vaentaam Vaentaam Devanin Sittham Onrae Pothum Thaevaa Maayaiyaana Inbanggal Vaentaam Vaentaam Makimaiyin Makizhchsi Pothum 4. Paavatthin Santhoshanggal Vaentaam Vaentaam Parisuttha Jeeviyam Pothum Thaevaa Ekipthin Pokkishanggalai Vaentaam Vaentaam Ini Varum Palan Onrae Pothum Thaevaa