பாடல் #31905
வானமீதில் ஏறி போன இயேசுவானவர்
🔤 Vaanameethil Aeri Pona Yesuvaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமீதில் ஏறி போன இயேசுவானவர் வருகை நாளில் திரும்பி வருவார் தூதர்களுடன் ஆர்ப்பரிப்பு சத்தம் எங்கும் கேட்குமே ஆரவார எக்காளம் வானில் முழங்குமே அல்லேலூயா (4) -2 1. பரிசுத்தத்தை காத்துக் கொண்ட பக்தர் யாவரும் பறந்து செல்லும் பரவச நாள் நெருங்கி வருகுதே பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தவர்கள் பரமன் பாதம் பாடல் பாடி என்றும் மகிழ்வார்கள் 2. மாமிசம் இரத்தம் லோக ஆசை அழிந்து போகும் பாவ சாபம் ராகம் யாவும் மறைந்து போகும் இமைப்பொழுதில் மறுரூபம் பெறுவோமே - 2 மன்னன் இயேசு அழைத்து செல்வர் மா சந்தோஷமே 3. ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும் தொனிக்குதே சாட்சி கூறி செய்தி சொல்ல தருணம் தந்தாரே ஆத்துமாக்களை சேகரிப்போம் - ஆண்டவரின் வருகை நாளில் ஆனந்திப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanameethil Aeri Pona Yesuvaanavar Varukai Naalil Thirumpi Varuvaar Thoodharkaludan Aarpparippu Sattham Engkum Kaetkumae Aaravaara Ekkaalam Vaanil Muzhangkumae Allaelooyaa (4) -2 1. Parisutthatthai Kaatthuk Konda Pakthar Yaavarum Paranthu Sellum Paravasa Naal Nerungki Varukuthae Paatu Kashtanggal Sakitthu Vaazhndhavarkal Paraman Paadham Paadal Paati Enrum Makizhvaarkal 2. Maamisam Rattham Loga Aasai Azhinthu Pokum Paava Saabam Raagam Yaavum Marainthu Pokum Imaippozhuthil Maruroobam Peruvomae - 2 Mannan Yesu Azhaitthu Selvar Maa Santhoshamae 3. Raajjiyatthin Suvisaesham Engkum Thonikkuthae Saatsi Koori Seythi Solla Tharunam Thanthaarae Aatthumaakkalai Saegarippom - Aandavarin Varukai Naalil Aananthippom